ஒருவந்தூர் பிடாரி செல்லாண்டியம்மன் கோயிலில் புதிய 27 அடி உயர தூக்குத்தேர் வெள்ளோட்டம்

ஒருவந்தூர் பிடாரி செல்லாண்டியம்மன் கோயிலில் புதிய 27 அடி உயர தூக்குத்தேர் வெள்ளோட்டம்

ஒருவந்தூர் பிடாரி செல்லாண்டியம்மன் கோயில் தூக்குத்தேர் வெள்ளோட்டத்தில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

ஒருவந்தூர் பிடாரி செல்லாண்டியம்மன் கோயிலில் 27 அடி உயர புதிய தூக்குத்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகா, ஒருவந்தூரில், பிரசித்தி பெற்ற அருள்மிகு பிடாரி செல்லாண்டியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில், மூலவராக பிடாரி செல்லாண்டியம்மனும், பரிவாரத் தெய்வங்களாக கருப்புசாமி, கன்னிமார், இசக்கி போன்ற தெய்வங்களுக்கான கோயில்களும் உள்ளன.

இக்கோயிலில், ஆண்டுதோறும் மாசி மகத்தையொட்டி, தேரோட்ட திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இத்திருவிழா, 15 நாட்கள் கொண்டாடப்படும். மார்கழியில் வேல் திருவிழாவும் நடைபெறும். திருவிழாவின்போது, பக்தர்களால் தூக்குத்தேர் தூக்கிச்செல்லப்பட்டு வீதி உலா நடைபெறும். அவ்வாறு தூக்கப்படும் தூக்குத்தேர், கோயிலின் வேல் மற்றும் பூஜை பொருட்களுடன், எட்டுப்பட்டி கிராமங்களுக்கும் எடுத்துச்செல்லப்படும். அனைத்து பகதிகளிலும் திரளான பக்தர்கள் வழிபாடு செய்வார்கள்.

இந்த ஆண்டு தூக்குத்தேர் திருவிழா விரைவில் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, 27 அடி உயரத்தில், புதிதாக தூக்குத்தேர் வடிவமைக்கப்பட்டது. புதிய தேர் வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது. ஒருவந்தூரில் இருந்து தூக்கிவரப்பட்ட தூக்குத்தேர், கோயிலை வந்தடைந்தது. பின்னர் தேருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story