நாமக்கல் மாவட்ட ஜமாபந்தியில் 891 மனுக்கள் அளிப்பு: 111 பேருக்கு நலத்திட்ட உதவி

நாமக்கல் மாவட்ட ஜமாபந்தியில் 891 மனுக்கள் அளிப்பு: 111 பேருக்கு நலத்திட்ட உதவி
X

பரமத்திவேலூரில் நடைபெற்ற ஜமாபந்தியில், கலெக்டர் ஸ்ரேயாசிங் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நாமக்கல், ப.வேலூர் மற்றும் மோகனூர் தாலுக்காவில் நடந்த ஜமாபந்தியில், 891 மனுக்கள் பெறப்பட்டு, 111 பேருக்கு நலத்திட்ட உதவி அளிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள , 8 தாலுக்கா அலுவலகங்களிலும், கலெக்டர், டிஆர்ஓ மற்றும் சப்-கலெக்டர் நிலையிலான அதிகாரிகள் மூலம் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெற்றது. ப.வேலூர் தாலுக்காவில், கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் ஜமாபந்தி, கடந்த 25ம் தேதி துவங்கி ஜூன்3 ல் முடிந்தது. நேற்று, நல்லூர், மணியனூர், கோலாரம், செருக்கலை, ராமதேவம், குன்னமலை, மேல்சாத்தம்பூர், சித்தம்பூண்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு, பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, ஸ்மார்ட் ரேஷன் கார்டு உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 111 மனுக்கள், கலெக்டரிடம் வழங்கப்பட்டது. மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, வருவாய் தீர்வாயம் முடிவதற்குள் தீர்வு வழங்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ப.÷லூரில் நடைபெற்ற ஜமாபந்தியில் 447 மனுக்கள் பெறப்பட்டது. அதில், 46 பேருக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் இயற்கை மரண உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவும், 32 பேருக்கு பட்டா மாறுதல் உத்தரவும் வழங்கப்பட்டது.

* நாமக்கல் தாலுக்கா அலுவலகத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் மோகனசுந்தரம் தலைமையில் நடந்த ஜமாபந்தியில், 271 மனுக்கள் வரப்பெற்றது. இதில், பட்டா மாறுதல் உட்பட, 21 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது.

* மோகனூர் தாலுக்கா அலுவலகத்தில், நாமக்கலர் ஆர்.டி.ஓ மஞ்சுளா தலைமையில் நடந்த ஜமாபந்தியில், 173 மனுக்கள் வரப்பெற்றன. 12 பேருக்கு பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை உடனடியாக வழங்கப்பட்டது.

Tags

Next Story