நாமக்கல்லில் ரூ.70.69 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி: அமைச்சர் வழங்கல்

நாமக்கல்லில் ரூ.70.69 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி: அமைச்சர் வழங்கல்
X

நாமக்கல்லில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மதிவேந்தன், ராஜ்சயபா எம்.பி ராஜேஷ்குமார் ஆகியோர் வழங்கினார்கள். அருகில் கலெக்டர் ஸ்ரேயாசிங், சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி ஆகியோர்.

நாமக்கல்லில் 113 பயனாளிகளுக்கு ரூ.70.69 லட்சம் மதிப்பீட்டில், நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பல்வேறு அரசு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடைபெற்றது. ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார், சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் 3 விவசாயிகளுக்கு ரூ.7,630 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 3 விவசாயிகளுக்கு ரூ.3.62 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், மகளிர் சுய உதவி குழுவினருக்கு மான்யத்துடன் கூடிய சுழல்நிதி, என மொத்தம் 113 பயனாளிகளுக்கு ரூ.70.69 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நாமக்கல் முனிசிபாலிட்டி சேர்மன் கலாநிதி, வைஸ் சேர்மன் பூபதி, டிஆர்டிஏ திட்ட இயக்குனர் வடிவேல், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் செல்வகுமரன், வேளாண்மை இணை இயக்குநர் அசோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story