மாவட்ட அளவில் அரசு பள்ளியில் உபரியாக உள்ள 66 பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வு!

மாவட்ட அளவில் அரசு பள்ளியில் உபரியாக உள்ள 66 பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வு!

பைல் படம் : மாவட்ட அளவில் அரசு பள்ளியில் உபரியாக உள்ள 66 பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வு

மாவட்ட அளவில் அரசு பள்ளியில் உபரியாக உள்ள 66 பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நடைபெற்றது.

மாவட்ட அளவில் அரசு பள்ளியில் உபரியாக உள்ள 66 பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வு

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள, 66 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நிரவல் கலந்தாய்வு, நாமக்கல்லில் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், கடந்த ஆண்டு படித்த மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, மாவட்டத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், தமிழில் 10, ஆங்கிலம் 9, கணிதம் 20, அறிவியல் 16, சமூக அறிவியல் 11 என, மொத்தம் 66 பேர் உபரி ஆசிரியர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, எமிஸ் ஆன்லைன் மூலம் பணி நிரவல் கலந்தாய்வு நடைபெற்றது.

அதில், மாவட்டத்திற்குள் காலியாக உள்ள பணியிடங்கள், கூடுதல் தேவையுள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள், பணி நிரவல் மூலம் நிரப்பப்பட்டனர். தொடர்ந்து, பணி நிரவல் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி பணி நியமன உத்தரவுகளை னழங்கினார்.

நேற்று முன்தினம் நடந்த முதுகலை ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வில், ராமாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் ரவிச்சந்திரன், புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பணி மாறுதல் பெற்றார்.

Tags

Read MoreRead Less
Next Story