பரமத்தி அருகே லாரி, பஸ், கார் ஆகிய 3 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்து: 20 பேர் காயம்!

பரமத்தி அருகே லாரி, பஸ், கார் ஆகிய 3 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்து: 20 பேர் காயம்!

 பரமத்தி அருகே லாரி, பஸ், கார் ஆகிய 3 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்து: 20 பேர் காயம்

பரமத்தி அருகே லாரி, பஸ், கார் ஆகிய 3 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்து ஏற்பட்டதில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

பரமத்தி அருகே லாரி, பஸ், கார் ஆகிய 3 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்து: 20 பேர் காயம்

நாமக்கல்

பரமத்தி அருகே லாரி, பஸ் மற்றும் கார் ஆகிய 3 வாகனங்களும் ஒன்றன்பின் ஒன்றாக மோதிய விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் லாரி சங்குவார்லால் (87) லாரி டிரைவர். இவர் குஜராத் மாநிலத்தில் இருந்து சோலார் பேனல் சரக்கு ஏற்றிய லாரியை திண்டுக்கலுக்கு ஓட்டிச் சென்றார். அந்த லாரி சம்பவத்தன்று நள்ளிரவு பரமத்தி வழியாக கரூர் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. பரமத்தி ஒருங்கிணைந்த கோர்ட் அருகே வந்தபோது லாரியை சங்குவார்லால் திடீரென நிறுத்தியுள்ளார். அப்போது லாரிக்குப் பின்னால் சேலத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு எக்ஸ்பிரஸ் பஸ் லாரி மீது மோதி நின்றது. அதே நேரத்தில் பஸ்சுக்குப் பின்னால், ஆந்திர மாநிலம் குப்பத்திலிருந்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நோக்கி சென்ற கார் ஒன்று பஸ்சின் பின் பகுதியில் மோதியது. அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதிய விபத்தில் மதுரை மாவட்டம், பைகார பகுதியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் மார்நாடு (54), தேனி மாவட்டம் குரும்பார்பட்டியைச் சேர்ந்த பஸ் கண்டக்டர் ஈஸ்வரன் (55) ஆகிய இருவரும் காயமடைந்தனர்.

இதுபோல் பஸ்சில் பயணம் செய்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பிரவீன் (23), உசிலம்பட்டியை சேர்ந்த தீபக்குமார் (22), தினேஷ்குமார் (29), மதுரை மேலூரை சேர்ந்த மனோகரன் (62) மதுரையைச் சேர்ந்த ஜோசிக் (26), ஆனந்த் (38), சேலம் மாவட்டம் தாரமங்கலத்தைச் சேர்ந்த செல்வகுமாரி (43), உசிலம்பட்டியை சேர்ந்த முத்துலட்சுமி (40) உள்பட 15 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மேலும் ஆந்திரா மாநிலம் குப்பத்திலிருந்து உசிலம்பட்டிக்கு திருவிழாவிற்காக காரில் சென்று கொண்டிருந்த பாண்டியன் (63), காமாட்சி (50) மற்றும் அவர்களது இரு மருமகள் மற்றும் இரு பேத்திகள் என 6 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் உனடியாக பரமத்தி வேலூர் மற்றும் நாமக்கல்லில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்து தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த லாரி டிரைவர் சங்குவார்லால் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story