ப.வேலூர் அருகே 2 டூ வீலர்கள் மோதி விபத்து: பெண் உயிரிழப்பு

ப.வேலூர் அருகே 2 டூ வீலர்கள் மோதி விபத்து: பெண் உயிரிழப்பு

பைல் படம் 

பரமத்தி வேலூர் அருகே இரண்டு டூ வீலர்கள் மோதிக்கொண்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

பரமத்தி வேலூர் அருகே இரண்டு டூ வீலர்கள் மோதிக்கொண்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகா குட்லாம்பாறை அருகே கே.புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவரது மனைவி புஷ்பா (45). இவர் தனது ஸ்கூட்டரில் வீட்டில் இருந்து புறப்பட்டு பரமத்திவேலூர் சென்றார். பின்னர் மீண்டும் ஸ்கூட்டரில் கே.புதுப்பாளையம் நோக்கி திரும்பி சென்றார்.

பரமத்தி வேலூர் -மோகனூர் மெயின் ரோட்டில் உள்ள பொய்யேரி வாய்க்கால் அவர் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக மற்றொரு டூ வீலரில் வேகமாக வந்த ஓருவர், புஷ்பா ஓட்டிச் சென்ற ஸ்கூட்டர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டார். இந்த விபத்தில் புஷ்பா நிலை தடுமாறி ஸ்கூட்டருடன் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. அதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து, புஷ்பாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பரமத்தி வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கும், பின்னர் அங்கிருந்து சேலம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டார். டாக்டர் சிகிச்சை பலனின்றி அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, புஷ்பா மீது மோதிவிட்டு நிற்காமல் டூ வீலரில் சென்ற நபரைத் தேடி வருகின்றனர்.

Tags

Next Story