/* */

ப.வேலூர் அருகே கார் ஓட்டி பழகிய போது விபத்து: 2 சிறுவர்கள் உயிரிழப்பு!

ப.வேலூர் அருகே கார் ஓட்டி பழகிய போது ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 2 சிறுவர்கள் உயிரிழப்பு!

HIGHLIGHTS

ப.வேலூர் அருகே கார் ஓட்டி பழகிய போது   விபத்து: 2 சிறுவர்கள் உயிரிழப்பு!
X

பைல் படம் : ப.வேலூர் அருகே கார் ஓட்டி பழகிய போது விபத்து: 2 சிறுவர்கள் உயிரிழப்பு

ப.வேலூர் அருகே கார் ஓட்டி பழகிய போது விபத்து: 2 சிறுவர்கள் உயிரிழப்பு

நாமக்கல்

பரமத்தி வேலூர் அருகே, கார் ஓட்டி பழகியபோது, 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அடுத்த கபிலர்மலை பெரியமருதூர் கிராமத்தை சேர்ந்தவர் சுதர்சன் (14). இவர் சம்பவத்தன்று இரவு 11 மணி அளவில் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் லோகேஷ் (17) என்பவருடன் கார் ஓட்டி பழகினார். காரை பரமத்தி வேலூர் பைபாஸ் ரோட்டில் இருந்து கபிலர்மலை நோக்கி சுதர்சன் ஓட்டி பழகிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே ஈரோடு நோக்கி சென்ற மற்றொரு கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சுதர்சன் மற்றும் அவரது நண்பர் லோகேஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் கிடைத்ததும்,ஜேடர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேதங்களை கைப்பற்றி பரமத்தி வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் நடத்தி விசாரணையில் சிறுவர்கள் இருவரும் கார் ஓட்டி பழகியதும், அதிவேகமாக கார் ஓட்டியதும் விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது. இது குறித்து, ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 11 Jun 2024 10:00 AM GMT

Related News