பவித்திரம் சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை அமோகம் ₹47 லட்சத்திற்கு வர்த்தகம்..!

பவித்திரம் சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை அமோகம் ₹47 லட்சத்திற்கு வர்த்தகம்..!
X
பவித்திரம் சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை அமோகம் ₹47 லட்சத்திற்கு வர்த்தகம்.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.

எருமப்பட்டி அடுத்த பவித்திரம், செவ்வந்திப்பட்டி சந்தையில் ஆடுகள் வரத்து அதிகரித்து, ₹47 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது. எருமப்பட்டி ஒன்றியம் பவித்திரம் செவ்வந்திப்பட்டியில் வாரந்தோறும் திங்கள்கிழமை இரு ஆட்டுச் சந்தைகள் நடைபெறுகிறது.

பல்வேறு பகுதிகளிலிருந்து வியாபாரிகள்

ஈரோடு, காங்கேயம், திருப்பூர், முசிறி, துறையூர், உப்பிலியாபுரம், பச்சைமலை, கோயம்புத்தூர், கொல்லிமலை உள்ளிட்ட பகுதியிலிருந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கவும், விற்கவும் வருகின்றனர். மேலும், சுற்றுவட்ட பகுதிகளான பொட்டிரெட்டிப்பட்டி, நவலடிப்பட்டி, வரகூர், வடவத்தூர், கோணங்கிப்பட்டி, முத்துகாபட்டி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

மாரியம்மன் பண்டிகை காரணமாக ஆடுகள் விற்பனை அதிகரிப்பு

நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாரியம்மன் பண்டிகை தொடங்கியுள்ளதால் நேற்று கூடிய ஆட்டுச்சந்தையில் ஆடுகள் வரத்து அதிகரித்தது. சுமார் 1700க்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்ட நிலையில், ₹45 லட்சத்திற்கு விற்பனையானது.

நாட்டுக்கோழிகளுக்கும் அமோக வரவேற்பு

இதேபோல, சுற்றுப்புற பகுதிகளிலிருந்து 500க்கும் மேற்பட்ட நாட்டுக்கோழிகள் விற்பனைக்கு வந்திருந்தது. இதனை வாங்க மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான வியாபாரிகள் குவிந்தனர். ஆக மொத்தம் ₹2 லட்சத்திற்கு கோழிகள் விற்பனையானது.

Tags

Next Story
வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததால் மாநகராட்சி பில் கலெக்டர் மீீது புகார்!