குமாரபாளையத்தில் உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிப்பு

குமாரபாளையம் நகராட்சி சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பொதுமக்களிடம் செயல்விளக்க நிகழ்ச்சி நடத்திக்காட்டப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சி சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பஸ் ஸ்டாண்ட், காவேரி நகர், பள்ளிபாளையம் பிரிவு சாலை உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது.
இது குறித்து சுகாதார அலுவலர் ராமமூர்த்தி கூறியதாவது:
குமாரபாளையத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பொதுமக்களிடம் செயல்விளக்க நிகழ்ச்சி நடத்திக்காட்டப்பட்டது. இதில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து வழங்க வேண்டும், சுற்றுப்புற பகுதியை சுத்தமாக வைத்துகொள்ள வேண்டும், பொதுமக்களுக்கு மரங்களின் அவசியம் எடுத்துரைக்க அனைத்து பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து, விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட துண்டு பிரசுரங்கள் அனைத்து வார்டுகளில் விநியோகம் செய்யப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் ஆணையர் ராஜேந்திரன் உள்ளிட்ட அலுவலர்கள் பலரும் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu