குமாரபாளையம் அருகே வீரமாத்தியம்மன் கும்பாபிஷேக தீர்த்தக்குட ஊர்வலம்

குமாரபாளையம் அருகே வீரமாத்தியம்மன் கும்பாபிஷேக தீர்த்தக்குட ஊர்வலம்
X

குமாரபாளையம் அருகே வீரமாத்தியம்மன் கும்பாபிஷேக தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது.

குமாரபாளையம் அருகே வீரமாத்தியம்மன் கும்பாபிஷேக தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே பச்சாம்பாளையம், அல்லிநாயக்கன்பாளையம் வீரமாத்தி அம்மன், ஐயனாரப்பன், வீரகாரன், கன்னிமார், கருப்புசாமி, வைரப்பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா பிப். 1ல் முகூர்த்தக்கால் நடுதலுடன் துவங்கியது. நேற்று காலை விக்னேஸ்வர பூஜை நடைபெற்றதுடன், காவிரி ஆற்றிலிருந்து மேள தாளங்களுடன் தீர்த்தக்குடங்கள், பாலிகை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.

நேற்று மாலை யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இன்று காலை யாகசாலை பூஜைகள் மற்றும் காலை 09:00 மணியளவில் மகா கும்பாபிஷேக விழா, தீபாராதனை, சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெறுவதுடன், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture