உ.வே.சாமிநாத அய்யர், தில்லையாடி வள்ளியம்மை பிறந்த நாள் விழா

உ.வே.சாமிநாத அய்யர், தில்லையாடி வள்ளியம்மை பிறந்த நாள் விழா
X

குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் உ.வே. சாமிநாத அய்யர், தில்லையாடிவள்ளியம்மை பிறந்த நாaள் விழா மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது.

குமாரபாளையத்தில் உ.வே. சாமிநாத அய்யர், தில்லையாடி வள்ளியம்மை பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் உ.வே. சாமிநாத அய்யர், தில்லையாடி வள்ளியம்மை பிறந்த நாள் விழா மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது.

மாணவ மாணவிகளுக்கு கட்டுரை போட்டி ஓவியப்போட்டி பேச்சுப்போட்டி வைக்கப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கும், போட்டியில் பங்கேற்றவர்களுக்கும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. நிர்வாகிகள் செல்வராஜ், தீனா, முகுந்தன், மற்றும் ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டனர்.

இதே போல் செங்குந்த மகாஜன சங்க நெசவாளர் அணி சார்பில் துணை அமைப்பாளர் சீனிவாசன் தலைமையில் தில்லையாடி வள்ளியம்மை பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அவரது திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. நிர்வாகிகள் தங்கராஜ், மகேந்திரன், பிரபு, சித்தலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai in future agriculture