ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றிய பொதுமக்கள்

ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றிய பொதுமக்கள்
X

குமாரபாளையம் அருகே ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டினர்.

குமாரபாளையம் அருகே ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றினர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி நல்லாம்பாளையம் பகுதியில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தாருக்கு, ஊராட்சி நிர்வாகத்தினர் முறைகேடாக அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.

தாலுக்கா அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் தொடர்ந்து இந்த பிரச்சனை உருவாகி வருகிறது. ஊராட்சி நிர்வாகத்தின் முறையற்ற அனுமதியை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கறுப்புக்கொடி கட்டினர்.

இது குறித்து ஊராட்சி தலைவி புஷ்பா கூறுகையில், இது தொடர்பாக தாலுக்கா அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் போதுமான விளக்கமும் கொடுக்கப்பட்டது. தற்போது மீண்டும் சிலர் கருப்புக்கொடி எனும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
ai in future agriculture