மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சியை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

குமாரபாளையத்தில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங். பங்கேற்றார்.
குமாரபாளையத்தில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங். தலைமை வகித்து நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங். பேசியதாவது:
தமிழர் மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும், காலந்தோறும் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த புரிதலையும் வளரும் தலைமுறையினருக்கு முழுமையாகக் கடத்துவதற்கும், பண்பாட்டின் முக்கியக் கூறுகளான கலை, இலக்கியம், கல்வி, இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை முறை ஆகியவற்றை உணர்த்திடும் பொருட்டும் தமிழ்நாடு முழுவதும் 100 கல்லூரிகளில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியினை நடத்திட திட்டமிடப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சி தமிழர் மரபும் நாகரிகமும், தமிழ்நாட்டில் சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூக பொருளாதார முன்னேற்றம், திசை தோறும் திராவிடம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடுதொல்லியல் ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, தொழில் முனைவுக்கான முன்னெடுப்புகள் வளர்ச்சியும், ஊடகங்களின் தோற்றமும், கணினித் தமிழ் வளர்ச்சியும் சவால்களும், தமிழ்நாட்டில் சுற்றுலா வாய்ப்புகள், நூற்றாண்டு கண்ட கல்விப் புரட்சி மற்றும் அரசின் திட்டங்கள் மற்றும் செயல்படுத்தும் முறைகள் ஆகிய தலைப்புகளின் கீழ் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிகளின் மூலம் பறைசாற்றும் தமிழின் முக்கியத்துவத்தையும், அதன் வரலாற்றையும் மாணவ, மாணவிகளின் இடையே கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக சிலப்பதிகாரத் தமிழ்நாடு என்ற தலைப்பில் மெய்யியலாளர் தஆறுமுகத்தமிழன், அரை நூற்றாண்டு ஆட்சியில் தமிழ்நாடு பெற்றதும், இழந்ததும் என்ற தலைப்பில் ஊடகவியலாளர் செந்தில் வேல் சொற்பொழிவாற்றனர்.
இந்நிகழ்ச்சியில், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் கௌசல்யா, மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மஹாலட்சுமி, உதவி ஆணையர் (கலால்)செல்வி, குமாரபாளையம் எக்ஸல் கல்லூரி தாளாளர் நடேசன், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu