குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம்

குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம்
X

குமாரபாளையம் பா.ஜ.க. சார்பில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டன.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகவிழாவையொட்டி, குமாரபாளையம் பா.ஜ.க. சார்பில் சிறப்பு வழிபாடுகள், அன்னதானம் வழங்கப்பட்டன.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பா.ஜ.க. சார்பில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகவிழாவையொட்டி, சிறப்பு வழிபாடுகள், அன்னதானம் வழங்கப்பட்டன.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதனை தேசிய அளவில் பெரும்பாலோர் கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு கட்டமாக குமாரபாளையம் பா.ஜ.க. சார்பில் விட்டலபுரி ராமர் கோவில், பாண்டுரங்கர் கோவில் உள்ளிட்ட 14 கோவில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன. பக்தர்களுக்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார், மாவட்ட பொது செயலர் சரவணராஜன், நகர தலைவர் சேகர், முன்னாள் நகராட்சி தலைவர் சிவசக்தி தனசேகரன் உள்ளிட்ட பலர் அன்னதானம் வழங்கினர். சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

குமாரபாளையம் அருகே புருசோத்தம பெருமாள் கோவிலில் சுவாமிகளின் திருவீதி உலா

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை, புருஷோத்தம பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவ விழாவில், மார்கழி மாதம் முழுதும் சிறப்பு பஜனை நிகழ்ச்சி, துவாதசி விரத பூஜை, அனுமன் ஜெயந்தி விழா, கூடாரவல்லி சிறப்பு பூஜை, ராமானுஜர் சிறப்பு பூஜை, உள்ளிட்ட வைபவங்கள் நடந்தது.

இதன் ஒரு கட்டமாக ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன. கோவில் வளாகத்திலிருந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத புருஷோத்தம பெருமாள் திருவீதி வலம் நடந்தது. ஜெய்ஹிந்த் நகர், தட்டான்குட்டை, சத்யா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வழியாக மேள தாளங்கள் முழங்க சிறப்பு திருவீதி உலா நடந்தது.

பக்தர்கள் சுவாமி வரும் வழி நெடுக தண்ணீர் ஊற்றி பாதையை தூய்மை படுத்தியதுடன், பூஜைக்கு தேங்காய், வாழைப்பழங்கள் உள்ளிட்ட பூஜை பொருட்கள் கொடுத்து கற்பூர தீபாராதனை காட்டப்பட்டு சுவாமிகளை வழிபட்டனர்.

இந்த திருவீதி உலாவில் பஜனை குழுவினர் பங்கேற்று பெருமாள் புகழ் படும் பக்தி பாடல்கள் பாடியவாறு வந்தனர். திருவீதி உலா நிறைவு பெற்றதும், குழந்தைகள் பெருமாள், ராதா, கிருஷ்ணன் உள்ளிட்ட வேடங்களிட்டு நடன நிகழ்ச்சிகள் மூலம் ராமர் புகழை எடுத்துரைத்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்