குமாரபாளையத்தில் வீட்டினுள் புகுந்த பாம்பை மீட்ட மீட்பு படையினர்

குமாரபாளையத்தில் வீட்டினுள் புகுந்த பாம்பை மீட்ட மீட்பு படையினர்
X

குமாரபாளையத்தில் வீட்டில் புகுந்த பாம்பை மீட்ட மீட்புப் படையினர்.

குமாரபாளையத்தில் வீட்டினுள் புகுந்த பாம்பை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே பள்ளிபாளையம் சாலை, ஆலங்காடு பகுதியில் தங்கமணி என்பவரது வீட்டில் பாம்பு இருந்துள்ளது. இதனை கண்டதும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து தகவலின் பேரில் அங்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையின் நிலைய அலுவலர் தண்டபாணி தலைமையில் வந்த படையினர் ஒரு மணி நேரம் போராடி லாவகமாக பாம்பை மீட்டு, இதனை வனப்பகுதியில் விட்டனர். உடனே வந்து பாம்பை மீட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.

குமாரபாளையம் சார்பதிவாளர் அலுவலகம் காவிரி கரையில் உள்ளது. இதனை சேர்ந்த ஆலங்காடு பகுதியில் பாம்புகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளன. குடியிருப்பு பகுதிகள் அதிகம் உள்ள நிலையில், பாம்புகளின் நடமாட்டமும் இங்கு அதிகளவில் இருந்து வருகின்றன.

இதனைக் கட்டுபடுத்த இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். மேலும் இந்த குடியிருப்பு பகுதி அருகே மருத்துவமனை, கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் அமைந்துள்ளதால் மாணவ, மாணவியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் நிலை நீடித்து வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!