புருஷோத்தம பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா யாக சாலை பூஜை

புருஷோத்தம பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா யாக சாலை பூஜை
X

குமாரபாளையம் அருகே புருஷோத்தம பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜை துவங்கி நடைபெற்று வருகிறது.

குமாரபாளையம் அருகே புருஷோத்தம பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜை துவங்கி நடைபெற்று வருகிறது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே புருஷோத்தம பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜை துவங்கி நடைபெற்று வருகிறது.

குமாரபாளையம் தட்டான்குட்டை ஊராட்சி, ஜெய்ஹிந்த் நகரில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ புருஷோத்தம பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி நேற்றுமுன்தினம் பவானி கூடுதுறை காவிரி சங்கமம் ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. மாலையில் யாகசாலை பூஜைகள் துவங்கியது. இன்று காலை 08:00 மணியளவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

பெருமாள் பக்தர்கள் கூறியதாவது:

திருமால் அல்லது பெருமாள் வைணவ சமயத்தை பின்பற்றுபவா்கள் வணங்கும் கடவுள். சங்க காலத்தில் தமிழர்கள் வணங்கிய மாயோன் என்ற கடவுள் திருமாலைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. சங்க காலத்திற்குப் பிறகு ஆழ்வார்கள் மற்றும் வைணவ ஆச்சாரியர்கள் ஆகியோரால் திருமால் வழிபாடு வளர்ச்சி பெற்றது.

தமிழர்கள் முல்லை நிலத் தெய்வமாக மாயோனை வணங்கியதாக சங்க இலக்கியம் கூறுகிறது. மாயோன் என்ற சொல்லுக்கு கருமை நிறம் கொண்டவன் என்று பொருள். எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடல் என்னும் நூலில் திருமாலைக் குறித்து 8 பாடல்கள் உள்ளன. பன்னிரு ஆழ்வார்கள் திருமாலைக் குறித்துப் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது.

நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் பாடப்பெற்ற 108 பெருமாள் கோவில்கள் திவ்ய தேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

வடகலை மரபினர் வேதங்கள் மற்றும் பஞ்சராத்திர ஆகமங்கள் போன்ற வடமொழி நூல்களைப் பின்பற்றியும் தென்கலை மரபினர் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் போன்ற தமிழ் நூல்களைப் பின்பற்றியும் பெருமாள் கோவில்களில் வழிபடுகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags

Next Story
ai in future agriculture