குமாரபாளையம் கோம்பு பள்ளத்தில் சிமெண்ட் தளம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் முதல் மணிமேகலை வீதி வரை சிமெண்ட் தளம் அமைக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பேருந்து நிலையம் அருகே கழிவுநீர் செல்லும் கோம்பு பள்ளம் உள்ளது. இது கத்தேரி பகுதியில் தொடங்கி காவிரி ஆற்றங்கரையோரம் மணிமேகலை வீதி வரை செல்கிறது.
காவல் நிலையம் பின்புறம் முதல் மணிமேகலை வீதி வரை சிமெண்ட் தளம் இல்லாததால், கழிவுகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், கழிவுநீர் எளிதில் செல்லமுடியாத நிலையும் ஏற்படுகிறது.
மேலும் அக்கம் பக்கம் உள்ளவர்கள் குப்பைகள் கொட்டுவது, அங்குள்ள இறைச்சி கடையினர் கழுவுகளை கொட்டுவது, கட்டுமான கழிவுகள் கொட்டுவது என பலரும் செய்வதால், கழிவுநீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டு, பரவலாக செல்வதுடன் ஆங்காங்கே குளம் போல் கழிவுநீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
இதனால் உருவாகும் கொசுக்களால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். பொதுமக்கள் துயரம் போக்க, கோம்பு பள்ளத்தை தூய்மை படுத்தி, பள்ளத்தின் மையப்பகுதியில் கழிவுநீர் எளிதில் செல்லும்படி, அடைப்புகளை நீக்க வேண்டும் எனவும், கோம்பு பள்ளத்தில் குப்பைகள் கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், காவல் நிலையம் பின்புறம் முதல் மணிமேகலை வீதி வரை சிமெண்ட் தளம் அமைக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu