பள்ளிபாளையம் விசைத்தறி கூடங்களுக்கு விடுமுறை

பவர்லூம் தறி (மாதிரி படம் )
பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விசைத்தறி கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக வெடியரசம்பாளையம்பகுதியில் ஏராளமான விசைத்தறி கூடங்கள் உள்ளன.
தற்போது கொரோனா பரவல் காரணமாக வெளி மாநில குறிப்பாக வட மாநிலங்களுக்கான விற்பனை முற்றிலும் இல்லாமல் போய்விட்டது. இதனால், இப்பகுதியில் இயங்கி வந்த விசைத்தறி கூடங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, விசைத்தறி உரிமையாளர் ஒருவர் கூறும்போது, நாங்கள் உற்பத்தி செய்யும் துணிகள் குஜராத், லக்னோ, டில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் ஆண்டு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. வட மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் அங்கு விற்பனை சரிந்துள்ளது. அதனால் எங்களுக்கு ஆர்டர் குறைந்துவிட்டது. ஊரடங்கும் அறிவித்துவிட்டதால் அங்கிருந்து ஆர்டர்கள் கிடைக்கவில்லை. நாங்கள் உற்பத்தி செய்த துணிகள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளன. கூடுதலாக உற்பத்தி செய்து இருப்பு வைத்தால் நஷ்டம் வரும். அதனால், விசைத்தறி கூடங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளோம் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu