/* */

குமாரபாளையம் கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

குமாரபாளையம் கடைகளில் தடை செய்யப்பட்ட 8 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

குமாரபாளையம் கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
X

குமாரபாளையம் நகராட்சி பகுதிகளில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சி பகுதிகளில் உள்ள சாலையோர கடைகள், தினசரி காய்கறி மார்க்கெட், பூக்கடைகள், பழக்கடைகள், ஓட்டல், பேக்கரி, மளிகை, உள்ளிட்ட பல கடைகளில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் மணிவண்ணன், குமாரபாளையம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ராமமூர்த்தி தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் கேரிபேக், பிளாஸ்டிக் டம்ளர்கள், உள்ளிட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் 8 கிலோ பறிமுதல் செய்து, நான்காயிரத்து 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இரு துறை அதிகாரிகளாலும் இந்த ஆய்வு தினசரி தொடரும் என வியாபார நிறுவனத்தாருக்கு அறிவுறுத்தப்பட்டது.

நகராட்சி சார்பில் எஸ்.ஓ. செல்வராஜ், சந்தானகிருஷ்ணன், ஜான்ராஜா, மாசுக்கட்டுபாட்டு வாரியம் சார்பில் உதவி பொறியாளர்கள் சந்தானம், விஜயன் உள்பட பலர் பங்கேற்றனர்.

கெமிக்கல் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போர்டு வைத்த ஊராட்சி நிர்வாகம்

குமாரபாளையம் அருகே கலெக்டர் உத்திரவை மீறி கெமிக்கல் ஆலை பணிகள் நடைபெறுவதையொட்டி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் போர்டு வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தட்டான்குட்டை ஊராட்சி தலைவி புஷ்பா கூறுகையில், குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி வீ.மேட்டூர் பகுதியில் தனியார் கெமிக்கல் ஆலை நிறுவ ஏற்பாடுகள் செய்து வந்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்த தகவலறிந்த மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, அந்த ஆலை நிர்வாகத்தினரிடம் பணிகள் நிறுத்துமாறு சொல்லி சென்றனர். ஆனால் அதனை பொருட்படுத்தாமல் மீண்டும் ஆலை நிறுவும் பணிகள் இரவு பகலாக நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தட்டான்குட்டை ஊராட்சி நிர்வாகம் சார்பில் போர்டு வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

சாயக்கழிவு நீரால் ஏற்படும் பாதிப்பு குறித்து விவசாயிகள் கூறுகையில், கண்மாய் பாசனத்தின் மூலம், நெல், வாழை, மக்காச்சோளம், மிளகாய், பருத்தி, தென்னை, நெல்லிக்காய் போன்ற பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. ஊரணிகள் மூலமும் விவசாயபணிகள் நடந்து வருகிறது. தற்போது பருவமழை பொய்த்து வருவதாலும், கிராமங்களில் விவசாயபணிகளுக்கு ஆட்கள் கிடைக்காததாலும், பலர் தங்களுக்கு சொந்தமான விளைநிலங்களை, தரிசாக போட்டு, அரிசி ஆலைகள், அட்டைக்கம்பெனிகள், சாயப்பட்டறை கம்பெனிகள், தோல்பதனிடும் தொழிற்சாலைகள், ரசாயனபவுடர் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு விற்றுவிடுகின்றனர்.

நகர் பகுதி அருகில் உள்ள விளைநிலங்களை, பிளாட்டுகள் போட்டு விற்றுவிடுகின்றனர். பல ஆலைகள், நகர்பகுதியை விட்டு வெளியில் இருப்பதால், வட்டாரவளர்ச்சிஅலுவலர்கள், ஓன்றியப்பகுதியை சேர்ந்த சுகாதார அலுவலர்கள், பொறியாளர்கள், தொழிற்சாலையில் உள்ள கழிவுநீர் , எப்படி கடத்தப்படுகிறது என,முறையான ஆய்வு செய்வதில்லை.

நீர்வரத்துக்கால்வாய்கள், சாக்கடை கால்வாய்களாக மாறி விட்டன. தற்போது, மழைக்காலம் தொடங்கிய நிலையில், ஓடை மற்றும் வரத்துக்கால்வாய்களில், குடியிருப்பு மற்றும் ஆலைகளில் இருந்து வெளியாகும் கழிவுநீரோடு, மழைநீரும் சேர்ந்து கண்மாய்கள், குளங்கள், ஊரணிகளில் தேங்கி உள்ளன. ஏற்கனவே பல்வேறு மாசு கலந்திருப்பதால், விஷமாக மாறியிருக்கும் தண்ணீரை, விவசாயத்திற்காக பயன்படுத்தும் போது, பயிர்கள் கருகும் நிலை உள்ளது. இதனால், கிராமபுறத்தில் விவசாயம் செய்து வரும் விவசாயிகள், கடுமையாக பாதிக்கின்றனர்.

ஆயிரக்கணக்கில் முதல் போட்டு, விவசாயபணிகளை செய்த விவசாயிகள், நஷ்டம் அடைகின்றனர். மேலும், கண்மாய்க்குள் வளரும் காட்டுக்கருவேல மரங்களின் காரணமாகவும், கண்மாய்த்தண்ணீர் பாதிப்பதாகவும் விவசாயிகள் புலம்புகின்றனர். கண்மாய்கள், ஊரணிக்கு தண்ணீர் வருவதற்காக, வெட்டப்பட்டிருக்கும் வரத்துக்கால்வாய்களில், குடியிருப்பு பகுதிகளில் இருந்து வரும் சாக்கடை கழிவுநீர் கலப்பதால், தண்ணீர் பாதிக்கிறது. ஊரணி, கண்மாய்க்குள் சாக்கடை கழிவுநீர் மட்டுமே தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றை விவசாயத்திற்கு பயன்படுத்தும் போது, பயிர்கள் கருகி விடுகின்றன. வரத்துக்கால்வாய்களில், பாலீதீன் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால், மழைநீரானது கண்மாய்க்கு வராமல், பாதிவழியில் நின்று தேங்கிவிடுகிறது. பாலீதீன்பைகளோ, நிலத்திற்குள் தண்ணீர் செல்வதை தடுத்து விடுகின்றன. ஏற்கனவே, முட்செடிகள் வளர்ந்திருப்பதால், வரத்துக்கால்வாய்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சாக்கடை கழிவுநீரும், குப்பையும் சேர்ந்து, விவசாயப்பணிகளை கடுமையாக பாதித்து வருகிறது.

அதிகாரிகள், கிராமபுறங்களில் உள்ள ஆலைகள் மற்றும் குடியிருப்புபகுதிகளில் ஆய்வு செய்து, கழிவுநீரால் விவசாயப்பணிகள் பாதிக்கப்படுவதை தடுக்க ,கிராமபுறங்களில் பாதாளசாக்கடை திட்டங்களை நிறைவேற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும்,'திருத்தங்கல் பாப்பன்குளம், உறிஞ்சி குளம் கண்மாய்களில், கழிவு நீர் கலப்பதால், 5 கி.மீ., சுற்றளவில் உள்ள விவசாய கிணறுகளில், தண்ணீர் மாசுபட்டு, விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது.

திருத்தங்கல் நகராட்சி கழிவு நீர் முழுவதும், குளங்களில் சேகரமாகி, விவசாயத்திற்கு வேட்டு வைக்கிறது. கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து கண்மாய்களில் கழிவு நீர் கலந்தால், விவசாய நிலங்கள் பயன்பாடு இன்றி தரிசாகி விடும். இப்போதே கழிவு நீர் தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும், நீர்வரத்து மற்றும் வெளியேறும் கால்வாய்களில் வாறுகால் தண்ணீர் செல்கிறது. கண்மாய் கரையை துர்நாற்றம் பிரச்னையில் சிக்குகிறது. முக்கியமான கண்மாய்களாக புதியாதிகுளம், கொண்டனேரி உள்ளன. இந்த இரு கண்மாய்களுக்கும், வாறுகால் தண்ணீர் செல்கிறது. இதை நம்பி, விவசாயம் செய்யும்போது, விளைநிலங்களில் கழிவுதண்ணீர் தேங்கி, விவசாயிகளுக்கு காலில் புண் ஏற்படுகிறது.

மேலும், கழிவு தண்ணீரால், பலவித நோய்கள் பயிருக்கு ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்த, மருந்து அடிக்கவேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்கு, வீரியம் மிக்க மருந்துகளை உபயோகிப்பதால், மனிதர்களுக்கும் நோய் ஏற்படுகிறது. விரிவாக்க பகுதிகள் வரும்போது, அங்குள்ள கண்மாய்கள், கழிவு தண்ணீர் தேங்க பயன்படுத்துகின்றனர். பாசனத்திற்கு பயன்பட்ட கண்மாய்கள் பல, கழிவு தண்ணீர் குட்டையாக மாறுகிறது. அனைத்து ஊர்களிலும், வடிகால் கழிவு நீரை, ஏதாவது ஒரு நீர் நிலைகளில்தான் இணைக்கின்றனர். மழை நேரங்களில் கழிவு நீர் , கண்மாய், ஊரணி உள்ளிட்ட பல்வேறு நீர் நிலைகளில் கலந்து தேங்குகிறது. இந்த தண்ணீரை, விவசாயத்திற்கு பயன்படுத்துவதால் நிலங்கள் கெட்டுப் போகிறது. காலப் போக்கில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு, தரிசு நிலமாக மாறி, விவசாயத்திற்கு பயனற்றதாக மாறுகிறது. விவசாயத்திற்கு பயன்படும் நீர் நிலைகளில், வடிகால் கழிவு நீர் தேங்குவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Updated On: 28 March 2023 12:15 PM GMT

Related News

Latest News

 1. கோவை மாநகர்
  கோவையில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் மரம் விழுந்து லாரி சேதம்
 2. லைஃப்ஸ்டைல்
  தமிழில் பிறந்த நாள் வாழ்த்து கூறும் மேற்கோள்கள்
 3. லைஃப்ஸ்டைல்
  தமிழில் போகிப் பண்டிகை வாழ்த்துக்கள் சொல்லும் அழகியல்
 4. லைஃப்ஸ்டைல்
  வயசு மேல வயசு வந்து வாழ்த்துகிற நேரமிது..!
 5. லைஃப்ஸ்டைல்
  கவிதை அலங்காரத்தில் அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
 6. ஈரோடு
  டி.என்.பாளையம் வனச்சரகத்தில் நாளை யானைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
 7. குமாரபாளையம்
  சாலை விபத்தில் இளைஞர் பலி : உடல் உறுப்புக்கள் தானம்..!
 8. வீடியோ
  Opening - Mass Entry செம்ம Vibe-ஆ இருக்கு !#saamaniyan...
 9. ஈரோடு
  சத்தியமங்கலம்: கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 1,300 கிலோ ரேஷன் அரிசி...
 10. வீடியோ
  Ramarajan,Ilaiyaraaja Combination -னே Blockbuster தான் !#ramarajan...