குமாரபாளையத்தில் பஸ் ஸ்டாப்பில் நிற்காத தனியார் பஸ் மக்களால் சிறை பிடிப்பு

குமாரபாளையத்தில் பஸ் ஸ்டாப்பில் நிற்காத தனியார் பஸ்ஸை பொதுமக்கள் சிறை பிடித்தனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு இடைப்பாடி இடையே குமாரபாளையம் வழியாக தனியார் பஸ் ஒன்று சென்று வருகிறது. இது குமாரபாளையம் நுழைவுப்பகுதியான காவேரி நகர் பஸ் நிறுத்தத்தில் இந்த பஸ் நிற்பதில்லை என பொதுமக்கள் புகார் கூறினார்கள். இங்கு சுமார் 3 வார்டுகளை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேலான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். தினமும் ஈரோடு நகருக்கு பெரும்பாலோர் வேலைக்கு சென்று வருகின்றனர். காலையில் இந்த பஸ்சில் சென்றால் வேலைக்கு செல்ல சரியாக இருக்கும் என்பதால் பெரும்பாலான பொதுமக்கள் இந்த பஸ்ஸில் சென்று வருகின்றனர்.
ஆனால் இந்த பஸ் காவேரி நகர் பஸ் நிறுத்த த்தில் நிற்காமல். பஸ் ஸ்டாண்ட் சென்றுதான் பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சில நாட்கள் முன்பு இந்த பஸ்ஸை சிறைபிடித்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் நேரில் வந்து பஸ் ஓட்டுனரிடம் கேட்க, காவேரி நகர் எங்களுக்கு பஸ் ஸ்டாப் கிடையாது, என்று கூறினார்கள். இதனால் போலீசார் இரு தரப்பினரை சமாதனம் செய்து அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தே.மு.தி.க. மாவட்ட துணை செயலர் மகாலிங்கம் கூறியதாவது: குமாரபாளையம் நகரில் விசைத்தறி, கைத்தறி, சாயப்பட்டறை, ஸ்பின்னிங் மில்கள் உள்ளிட்ட பல தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதில் பல்லாயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
வெப்படை, பள்ளிபாளையம், சானார்பாளையம், குப்பாண்டபாளையம், கல்லங்காட்டுவலசு, மேட்டுக்கடை,இடைப்பாடி, தேவூர், உள்ளிட்ட பல பகுதியில் இருந்து தொழிலாளர்கள் வேலைக்கு வருகிறார்கள். காவேரி நகர் பகுதியில் அதிக தொழில் நிறுவனங்கள் உள்ளன. இங்கிருந்து ஈரோடு, சித்தோடு, பெருந்துறை சிப்காட், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்கு சென்று வருகிறார்கள். மேலும் இங்கிருந்து ஈரோடு பகுதியில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு கல்வி பயில மாணவ, மாணவியர் சென்று வருகிறார்கள். இவர்களுக்கு இந்த பஸ் மிகவும் உதவியாக இருந்து வந்தது.
ஆனால், குமாரபாளையம் நுழைவுப்பகுதியான காவேரி நகர் பஸ் நிறுத்தத்தில் இந்த பஸ் நிற்பதில்லை. கேட்டால் எங்களுக்கு இது ஸ்டாப் கிடையாது என்கின்றனர். மூன்று வார்டு பொதுமக்கள் இருக்கும் இந்த பகுதியில் பஸ் நிறுத்தாமல் எங்கு நிறுத்துவார்கள். இதனால் பல ஆயிரம் தொழிலாளர்கள், மாணவ, மாணவியர் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகள் இருக்கையுடன் பஸ் ஸ்டாப் கட்டப்பட்டும் உள்ளது. காவேரி நகரா? அங்கு நிற்காது, கீழே இறங்கு, என கீழே இறக்கி விடும் நிலை நீடித்து வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் இது குறித்து நடவடிக்கை மேற்கொண்டு, இங்கு பஸ் நிற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி இங்கு பஸ் நிறுத்தாவிட்டால் தே,மு,தி.க. சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu