குமாரபாளையத்தில் மராத்தான் போட்டி: ஏராளமானோர் பங்கேற்பு

குமாரபாளையத்தில் மராத்தான் போட்டி: ஏராளமானோர் பங்கேற்பு
X

குமாரபாளையத்தில் நடைபெற்ற மராத்தான் போட்டியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

குமாரபாளையத்தில் நடைபெற்ற மராத்தான் போட்டியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் நடைபெற்ற மராத்தான் போட்டியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, வட்டார போக்குவரத்து அலுவலகம், இந்திய கனரக வாகன ஓட்டுனர்கள் நல கூட்டமைப்பு, தேசிய குற்ற விசாரணை கழகம் சார்பில் இந்த மராத்தான் போட்டி நடைபெற்றது.

இதில் நிர்வாகி அமிர்தலிங்கம் தலைமை வகித்தார். நிர்வாகிகள் முத்துக்குமார், சுனில்குமார், யாச்பவர், ராயல் சந்தோஷ் கொடியசைத்து துவக்கி வைத்தனர். சேலம் கோவை புறவழிச்சாலை, எஸ்.எஸ்.எம்.பொறியியல் கல்லூரி முன்பு துவங்கிய மராத்தான் ஓட்டம், கவுரி பைபாஸ், பள்ளிபாளையம் சாலை, அபெக்ஸ் காலனி, ஆனங்கூர் சாலை, சேலம் சாலை வழியாக நகராட்சி அலுவலகத்தில் நிறைவு பெற்றது. இதில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகளை நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் வழங்கி வாழ்த்திப் பேசினார்.

Tags

Next Story
the future of ai in healthcare