குமாரபாளையத்தில் பிரபாகரன் பிறந்தநாள் கொண்டாட்டம்..
குமாரபாளையத்தில் பிரபாகரன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் 68 ஆவது பிறந்தநாள் விழா குமாரபாளையத்தில் கொண்டாடப்பட்டது. குமாரபாளையத்தில் உள்ள சேலம், கோவை புறவழிச்சாலை அருகே உள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவுத்தூண் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தமிழ் தேசிய பேரியக்க தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.
தமிழ் ஆர்வலர்கள் சமர்ப்பா குமரன், செல்வராஜ், பாலசுப்ரமணியம், வெள்ளிங்கிரி, ராஜா, ம.தி.மு.க. விஸ்வநாதன் உள்பட பலர் பங்கேற்றனர். இதில் பங்கேற்றவர்கள் பிரபாகரன் போராட்டம் குறித்தும், அவரது வாழ்க்கை குறித்தும் நினைவு கூர்ந்தனர்.
தொடர்ந்து, தமிழ் ஆர்வலர்கள் கூறியதாவது:
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 1972 ஆம் ஆண்டு புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18 ஆவது அகவையில் தொடங்கினார். 1976 ஆம் ஆண்டு மே 6 ஆம் தேதி புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது கடந்த 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி முல்லைத்தீவுப் பகுதியில் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்தது. வேலுபிள்ளை பிராபாகரன் தீவிரவாதம், கொலை மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களுக்காக 1991 ஆம் ஆண்டு முதல் பன்னாட்டுக் காவலகம் அமைப்பால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார்.
மேலும், இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தால் பிரபாகரனுக்கு கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது. 1991 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தியை படுகொலை செய்ய திட்டமிட்டதாகவும் பிரபாகரன் குற்றம்சாட்டப்பட்டார் என தமிழ் ஆர்வர்கள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu