குமாரபாளையம் வீரமாத்தியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

குமாரபாளையம் வீரமாத்தியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
X

குமாரபாளையம் அருகே வீரமாத்தியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்ததையொட்டி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்

குமாரபாளையத்தில் வீரமாத்தியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

குமாரபாளையத்தில் வீரமாத்தியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ஓலப்பாளையம் பகுதியில் சக்தி விநாயகர், வீரமாத்தியம்மன், கன்னிமார் சுவாமிகள் கோவில் கும்பாபிஷேக விழா, ஜூன் 20ல் முகூர்த்தக்கால் அமைக்கும் விழாவுடன் துவங்கியது.

ஜூன் 27ல் காவேரி ஆற்றிலிருந்து தீர்தக்குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. இரண்டு நாட்கள் யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று காலை 09:30 மணியளவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

பக்தர்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டது. ஓலப்பாளையம் சுற்றியுள்ள பல பகுதியில் இருந்து பக்தர்கள் பெருமளவில் பங்கேற்றனர். சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன.

பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவை கோபாலகிருஷ்ண அய்யர், ஸ்ரீராம் அய்யர் ஆகியோர் நடத்தி கொடுத்தனர். கோவில் விழாக்குழுவினர் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

Tags

Next Story
சிறுநீரகத்துல நச்சுக்கள் இருக்கா ?..உடனே வெளியேற்ற இந்த சில பழங்கள சாப்டுங்க..!| Best fruits for kidney cleansing naturally in tamil