சிகிச்சை எடுத்தும் நோய் குணமாகாத வேதனை: பெண் தற்கொலை

சிகிச்சை எடுத்தும் நோய் குணமாகாத   வேதனை: பெண் தற்கொலை
X

பெண் தற்கொலை (கார்ட்டூன் படம்)

உடல்நலமில்லாமல் சிகிச்சை எடுத்தும் நோய் குணமாகாத வேதனையில் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் நீண்ட நாட்களாக சிகிச்சை எடுத்தும் நோய் குணமாகாததால் வேதனையில் இருந்த பெண் தற்கொலை செய்துகொண்டார்.

குமாரபாளையம் அப்புராய சத்திரம் பகுதியை சேந்தவர் கார்த்திகேயன். அவரது மனைவி சுப்புலட்சுமி (36). இந்த தம்பதிக்கு திருமணமாகி 18ஆண்டுகள் ஆகிவிட்டன. இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். சுப்புலட்சுமிக்கு தொடர்ந்து உடல்நலமில்லாமல் இருந்துள்ளது. அவர்களும் பல இடங்களில் சிகிச்சை எடுத்துள்ளனர். ஆனாலும், அவருக்கு உடல் குணமாகவில்லை. இதில் சுப்புலட்சுமி மனவேதனையில் இருந்துள்ளார்.

இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து சுப்புலட்சுமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!