குமாரபாளையம் தி.மு.க. வர்த்தக அணியினரின் ஆலோசனை கூட்டம்

குமாரபாளையம் தி.மு.க. வர்த்தக அணியினரின் ஆலோசனை கூட்டம்
X

குமாரபாளையம் தி.மு.க. வர்த்தக அணியினரின் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாநில செயலர் காசிமுத்துமாணிக்கம் பேசினார்.

குமாரபாளையம் தி.மு.க. வர்த்தக அணியினரின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தி.மு.க. வர்த்தக அணியினரின் ஆலோசனை கூட்டம் மாநில செயலர் காசி முத்து மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது.

வயது மூப்பினால் இறந்த முன்னாள் வர்த்தக அணி தலைவர் உபயதுல்லாவிற்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மார்ச். 1ல் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, தமிழகம் முழுதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க சங்கிலி, மோதிரம் அணிவித்தல், அரசு பள்ளிகளில் பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்குதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன்பின் காசி முத்து மாணிக்கம் கூறியதாவது:

திருப்பத்தூர் எம்.எல்.ஏ. வால்மீகி, காங்கிரஸ் எம்.ல்.ஏ.வாக இருத்த போது, உடல்நலமில்லாமல் வெற்றி பெற்ற இரண்டு ஆண்டுகளுக்குள் இறந்தார். அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். அந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளரை நிறுத்தவில்லை. இரண்டு ஆண்டுகளில் இறந்தது வருந்த தக்கது. அதனால் நான் வேட்பாளரை நிறுத்தவில்லை என்று எம்.ஜி.ஆர். கூறினார். இப்படிப்பட்ட எம்.ஜி.ஆரின் விசுவாசி தற்போது யாரும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!