குமாரபாளையத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

குமாரபாளையத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா  கொண்டாட்டம்
X

குமாரபாளையத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது

குமாரபாளையத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா நகர செயலர் பாலசுப்ரமணி தலைமையில் கொண்டாடப்பட்டது.

பயனியர் மாளிகை அருகே உள்ள அண்ணா சிலை முன்பு, மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள், அன்னதானம் வழங்கப்பட்டன. துணை செயலர் திருநாவுக்கரசு, கவுன்சிலர் புருஷோத்தமன், நிர்வாகிகள் அர்ச்சுணன், ரவி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்த நிலையில் இன்று ஜெயலலிதா பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!