குமாரபாளையத்தில் பாசம் ஆதரவற்றோர் மையத்தை திறந்துவைத்த இன்ஸ்பெக்டர்

குமாரபாளையத்தில் பாசம் ஆதரவற்றோர் மையத்தை   திறந்துவைத்த இன்ஸ்பெக்டர்
X

குமாரபாளையத்தில் பாசம் ஆதரவற்றோர் மையத்தை இன்ஸ்பெக்டர் ரவி திறந்து வைத்தார்.

குமாரபாளையத்தில் பாசம் ஆதரவற்றோர் மையத்தை இன்ஸ்பெக்டர் ரவி திறந்து வைத்தார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பாசம் ஆதரவற்றோர் மையம் திறப்பு விழா அதன் நிறுவனர் குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த மையத்தை இன்ஸ்பெக்டர் ரவி பங்கேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்து வாழ்த்திப் பேசினார். முதன் முதலாக நான்கு முதியவர்கள் இந்த மையத்தில் சேர்க்கப்பட்டனர்.

இது பற்றி நிறுவனர் குமார் கூறுகையில், பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள், வயதான காலத்தில் கணவனும் இல்லாத மூதாட்டிகள், குடும்பத்தினரால் விரட்டி விடப்பட்ட நபர்கள் என பல முதியவர்கள் பஸ் ஸ்டாண்ட், கோவில் வாசல்கள், மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்கள் என பல இடங்களில் யாசகம் பெற்று வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவாக ஏதாவது செய்ய வேண்டும் என பல ஆண்டுகளாக எண்ணிக்கொண்டு இருந்தேன். எனது முயற்சிக்கு ஆதரவாக சிலர் உதவி செய்வதாக கூறினர். ஆண்டவன் வழிகாட்டுவான் என்ற எண்ணத்தில் இந்த மையத்தை துவக்கி உள்ளோம். ஆதரவு இல்லாத நபர்கள் வாழ்வுக்கு உதவும் விதத்தில் ஒவ்வொருவரும் தன்னால் ஆன சிறு உதவியை செய்து உதவ வேண்டுகிறேன். உங்கள் வீட்டு திருமணம், திருவிழா உள்ளிட்ட விஷேக நாட்களில் உணவு மீதமானால், இங்கு உள்ளவர்களுக்கு கொடுக்க வேண்டுகிறோம். உங்கள் பிறந்த நாள், திருமண நாள், குழந்தைகள் பிறந்த நாள் ஆகிய நாட்களில் எங்கள் மையத்திற்கு வந்து இங்குள்ள ஆதரவற்ற நபர்களுடன் கொண்டாடி, உணவு வழங்கவும் வேண்டுகிறோம். தொடர்புக்கு: 98425 24038, 97518 14655.

இவ்வாறு அவர் கூறினார்.

நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன், கோபி, சிறுவலூர், கவுண்டம்பாளையம் சுப்ரமணி, தட்டான்குட்டை ஊராட்சி தலைவி புஷ்பா, முன்னாள் தலைவர் செல்லமுத்து, ஆடிட்டர் சுந்தர், பள்ளிபாளையம் ராஜராஜேஸ்வரி சக்ரபீடம் லட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai in future agriculture