அரசு பி.எட்.கல்லூரியில் தாய்மொழி தினம், ஆசிரியர் மன்றம் துவக்கம்

அரசு பி.எட்.கல்லூரியில் தாய்மொழி தினம், ஆசிரியர் மன்றம் துவக்கம்
X

குமாரபாளையம் அரசு பி.எட்.கல்லூரியில் நடைபெற்ற தாய்மொழி தினம், ஆசிரியர் மன்றம் துவக்க விழாவில் முதல்வர் ஜான் பீட்டர் பேசினார்.

குமாரபாளையம் அரசு பி.எட்.கல்லூரியில் தாய்மொழி தினம், ஆசிரியர் மன்றம் துவக்க விழா நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசு பி.எட்.கல்லூரியில் தாய்மொழி தினம், ஆசிரியர் மன்றம் துவக்க விழா நடைபெற்றது.

குமாரபாளையம் அரசு பி.எட்.கல்லூரியில் தாய்மொழி தினம், ஆசிரியர் மன்றம் துவக்க விழா முதல்வர் ஜான் பீட்டர் தலைமையில் நடைபெற்றது. ஜான் பீட்டர் பேசியதாவது:

உலக தாய்மொழி நாள் கொண்டாட்ட வரலாறு, தாய் மொழியில் பற்று, மொழி அழியாவண்ணம் காத்தல், பன்மொழிகளை விருப்பத்தின் அடிப்படையில் கற்றல், மொழியில் வல்லவராக பயிற்சி பெறுதல், ஆசிரியர்களின் மொழியின் மீதான ஆர்வம் ஆகியவைகளை பின்பற்றுங்கள். இவ்வாறு பேசினார்.

ஆசிரியர் மன்ற புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாணவ, மாணவியர் பங்கேற்ற வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

ரவீந்திரநாத் பெண்கள் பி.எட். கல்லூரியின் முதல்வர் அழகு சுந்தரம், கல்லூரி பேராசிரியர்கள் மனோகரன், ஹெலன், மேபல், தீபா, தங்கவேல், சின்னப்பராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai in future agriculture