குமாரபாளையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக சரக்கு வாகனங்கள்

குமாரபாளையத்தில் பகலில் சரக்கு வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றன.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சேலம் சாலை இடைப்பாடி சாலை, பள்ளிபாளையம் சாலை, ஆனங்கூர் சாலை உள்ளிட்ட பல சாலைகளில் ஏராளமான வியாபார நிறுவனங்கள் உள்ளன.
இவைகளில் சரக்குகளை இறக்க ஆங்காங்கே லாரிகள், டெம்போக்கள் உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் பகல் நேரத்தில் சாலையின் குறுக்கே, வாகனங்களை நிறுத்தி சரக்குகளை இறக்குகின்றனர்.
இதனால் குறுகிய சாலைகளில் வரும் பஸ், லாரிகள், கார்கள் உள்ளிட்ட இதர வாகனங்கள் செல்ல மிகவும் சிரமம் ஏற்படுகிறது. சரக்குகள் இறக்க குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி, போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கேட்டுக்கொள்கின்றனர்.
குமாரபாளையம் அருகே படைவீடு பேரூராட்சி, சங்கர் சிமெண்ட் ஆலை அருகே சாலை விரிவாக்கப்பணிகள் நடந்து வருகிறது. இதற்காக சாலையில் இருபுறமும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த 60க்கும் மேற்பட்ட புளியமரங்கள் உள்ளிட்ட பெரிய மரங்கள் பொக்லின் மூலம் அகற்றப்பட்டன.
இதனைக் கண்ட சமூக ஆர்வலர்கள், அகற்றப்படும் மரங்களை வேறு இடங்களில் வைத்து வளர்க்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர். மரங்களை வெட்டிய செயல் அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu