காவிரி ஆற்றின் வழியாக காஸ் பைப் லைன் மண் பரிசோதனை துவக்கம்!

காவிரி ஆற்றின் வழியாக காஸ் பைப் லைன்   மண் பரிசோதனை துவக்கம்!
X

படவிளக்கம் :

குமாரபாளையம் காவிரி ஆற்றில் காஸ் பைப் லைன் அமைக்கும் பணிக்காக மண் பரிசோதனை செய்யும் பணி துவங்கி நடந்து வருகிறது.

குமாரபாளையம் காவிரி ஆற்றின் வழியாக காஸ் பைப் லைன் அமைக்க மண் பரிசோதனை பணி துவக்கப்பட்டது.

காவிரி ஆற்றின் வழியாக காஸ் பைப் லைன் மண் பரிசோதனை துவக்கம்

குமாரபாளையம் காவிரி ஆற்றின் வழியாக காஸ் பைப் லைன் அமைக்க மண் பரிசோதனை பணி துவக்கப்பட்டது.

காஸ் பைப் லைன் அமைக்கும் பணி, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை ஒருங்கிணைத்து நடந்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக குமாரபாளையம் காவிரி ஆற்றின் வழியாக காஸ் பைப் லைன் கொண்டு செல்வதற்காக, மண் பரிசோதனை பணி துவக்கப்பட்டுள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை உதவி இயக்குனர் வெங்கடாசலம் கூறியதாவது:

காஸ் லைன் பைப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், இதன் ஒரு பகுதியாக குமாரபாளையம் வழியாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பைப் லைன் காவிரி ஆற்றை கடந்து அமைக்கப்படவிருப்பதால், அதற்கான மண் பரிசோதனை பணி காவிரி ஆற்றில் துவங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த காஸ் பைப் லைன்கள் குமாரபாளையம் எதிர்மேடு பகுதியில் பொக்லின் உதவியுடன் பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த காஸ் பைப் லைன் விவசாய நிலங்கள் வழியாக அமைக்க முன்பு அறிவித்த நிலையில், அதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதற்காக பல நாட்கள் பல்வேறு விதமான போராட்டம் நடத்தப்பட்டது. கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டதால், புறவழிச்சாலை வழியாக இந்த பைப் லைன் அமைக்கும் பணி நடந்து வருவது குறிப்பிடப்பட்டது.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings