ஜெ. பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கிய முன்னாள் அமைச்சர்

ஜெ. பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கிய முன்னாள் அமைச்சர்
X

படவிளக்கம்: பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி, பால், பிரட், பெட்ஷீட் வழங்கினார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி முன்னாள் அமைச்சர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

ஜெ. பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கிய முன்னாள் அமைச்சர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி முன்னாள் அமைச்சர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

பள்ளிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளிலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளையொட்டி நடந்த கோலப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதுடன், அனைத்து வார்டுகளிலும் கட்சியின் கொடியேற்றி வைத்து முன்னாள் அமைச்சர் தங்கமணி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு பால், பிரட், பெட்ஷீட் ஆகியவற்றை வழங்கினார். இதில் பள்ளிபாளையம் நகர அ.தி.மு.க செயலாளர் வெள்ளிங்கிரி, அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் செந்தில், பள்ளிபாளையம் நகர துணை செயலாளர் ஜெய்கணேஷ், அம்மா பேரவை செயலாளர் சுப்பிரமணி, மற்றும் பலர் பங்கேற்றனர்.

குமாரபாளையம் அருகே நடந்த பூமி பூஜைகளில் முன்னாள் அமைச்சர் பங்கேற்றார்.

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம், தட்டான்குட்டை, குப்பாண்டபாளையம் ஊராட்சியில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது. முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்று, பல்லக்காபாளையத்தில் வடிகால், தட்டான்குட்டை ஊராட்சி, ஓலப்பாளையம், சத்யா நகர், காவடியான்காடு, குப்பாண்டபாளையம் ஊராட்சி செல்வம் நகர், கே.கே. நகர் உள்ளிட்ட பகுதிகளில் வடிகால், குடிநீர் மேல்நிலைத்தொட்டி, சிமெண்ட் தரை தளம், உள்ளிட்ட பல பணிகளை, 60 லட்சம் ரூபாய் மதிப்பில் பூமி பூஜை போடப்பட்டு, கட்டுமான பணிகள் துவக்கி வைத்ததுடன் தட்டான்குட்டை ஊராட்சி சத்யா நகரில் ரேஷன் கடையை திறந்து வைத்தார். இதில் தட்டான்குட்டை ஊராட்சி தலைவி புஷ்பா, மாவட்ட உறுப்பினர் செந்தில், ஒன்றிய அ.தி.மு.க. செயலர் குமரேசன், உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story