இரண்டு வீடுகளில் தீ விபத்து : தீயில் எரிந்த பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள்

இரண்டு வீடுகளில் தீ விபத்து : தீயில் எரிந்த பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள்
X

குமாரபாளையம் அருகே இரண்டு வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது.

குமாரபாளையம் அருகே இரண்டு வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டதில் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் தீயில் எரிந்து சேதமாகின.

குமாரபாளையம் அருகே இரண்டு வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டதில் தீயில் எரிந்த பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் தீயில் எரிந்து சேதமாகின.

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் ஆயிகவுண்டம்பாளையம் பகுதியில் வசிப்பவர்கள் கந்தன், 50, முத்துவீரதுரைசாமி, 50. கூலித்தொழிலாளிகள்.

அருகருகே உள்ள சிமெண்ட் அட்டை மற்றும் தகர சீட் போட்ட இரு வீடுகளில் தங்கள் குடும்பத்துடன் வசித்து வந்தனர். நேற்று காலை இரு வீட்டாரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுவிட்டனர். நேற்று மாலை 12:45 மணியளவில் இரு வீடுகளில் திடீரென்று தீப்பிடித்தது. அக்கம் பக்கம் உள்ளவர்கள் குமாரபாளையம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தர, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

இரு வீடுகளில் உள்ள துணிமணிகள், பீரோ, பீரோவில் வைத்திருந்த பத்திரம், ஆதார் கார்டு, ரேசன் கார்டு உள்ளிட்ட தஸ்தாவேஜிகள் தீயில் எரிந்து சேதமாகின. வீட்டின் உரிமையாளர்கள் தகவல் அறிந்து வந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து குமாரபாளையம் போலீஸ் விசாரணை செய்து வருகிறார்கள். இந்த தீ விபத்திற்கு காரணம் உயர் அழுத்த மின் மின் கசிவு என கூறப்படுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!