குமாரபாளையம் பகுதி கோவில்களில் திருவிழா சிறப்பு வழிபாடுகள்

குமாரபாளையம் 24 மனை மாரியம்மன் கோவிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
குமாரபாளையம் இன்றுகுமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள கோவில்களில் திருவிழா என்பதால் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் மறு பூச்சாட்டு நடைபெற்றதுடன், ஊரில் உள்ள அனைத்து பகுதி மாரியம்மன் கோவில்களில் பூச்சாட்டு விழா நடைபெற்றது.
குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் மகா குண்டம், தேர்த்திருவிழா பிப்.14 பூச்சாட்டுதலுடன் துவங்கி, மறுபூச்சாட்டு விழா நடைபெற்றது. இதனையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. கொடியேற்று விழா நடந்து முடிந்து, பிப். 28ல் அம்மனுக்கு புனித நீர் அபிஷேகம், தேர்க்கலசம் வைத்தல், அம்மன் சக்தி அழைத்தல், மார்ச். 1ல் மகா குண்டம், பூ மிதித்தல், பொங்கல் ஆராதனை, மார்ச். 2ல் அம்மன் திருக்கல்யாணம், மகா தேர்த்திருவிழா, வண்டி வேடிக்கை, மார்ச். 3ல் தேர் நிலை அடைதல், வாண வேடிக்கை காட்சி விழா, அம்மன் அலங்கார திருவீதி உலா, மார்ச். 4ல் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா, மார்ச். 5ல் அம்மனுக்கு ஊஞ்சல் விழா நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.
குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களில் தினமும் கட்டளைதாரர்கள் சிறப்பு வழிபாடு, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அம்மன் திருவீதி உலா ஆகியவை நடைபெற்று வருகிறது.
இதே போல் குமாரபாளையம் அருகே கள்ளிபாளையம் சக்தி காளியம்மன், சக்தி மாரியம்மன் கோவிலில் 23ம் ஆண்டு பூ மிதித்தல் விழாவையொட்டி மறு பூச்சாட்டு விழா நடைபெற்றது. மாரியம்மனுக்கு கம்பம் நடுதல், 28ல் அம்மனுக்கு புனித நீர் அபிஷேகம், அம்மன் சக்தி அழைத்தல், மார்ச். 1ல் மகா குண்டம், பூ மிதித்தல், பொங்கல் ஆராதனை, மார்ச். 2ல் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் காளிமுத்து, நிர்வாகிகள் சுப்ரமணி, நந்தகுமார், சண்முகம், கிருஷ்ணராஜ், தங்கராசு மற்றும் குண்டம் பராமரிப்பு குழுவினர் செய்து வருகின்றனர். பிப். 28, மார்ச். 1, மார்ச். 2 ஆகிய 3 நாட்களும் பக்தர்களுக்கு மூன்று வேளைகளும் அன்னதானம் வழங்கப்படவுள்ளது.
இந்த கோவில்களை சுற்றி ராட்டினங்கள், சிறுவர், சிறுமியர்க்கான பலூன், விளையாட்டு பொம்மை கடைகள், பானிபூரி, தர்பூசணி, தற்காலிக டிபன் கடைகள், கரும்பு சாறு கடைகள், பெண்களுக்கான ஆபரண கடைகள், வீட்டு உபயோக பொருட்கல் விற்கும் கடைகள் உள்ளிட்டஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருவிழாவினால் இது போன்ற கடையினருக்கும் வாழ்வாதாரம் கிடைத்து வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu