குமாரபாளையத்தில் கவிழ்ந்த எத்தனால் ஏற்றி வந்த டேங்கர் லாரி அகற்றம்

குமாரபாளையத்தில் கவிழ்ந்த எத்தனால்   ஏற்றி வந்த டேங்கர் லாரி அகற்றம்
X

குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்த எத்தனால் எரிபொருள் ஏற்றி வந்த டேங்கர் லாரி நேற்று கோவையில் இருந்து வரவழைக்கப்பட்ட பெரிய கிரேன் மூலம் லாரி அப்புறப்படுத்தப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள பச்சாம்பாளையம் என்.ஹெச். சாலை பகுதியில், கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்திலிருந்து எளிதில் தீப்பற்றக்கூடிய பெட்ரோல் எரிபொருள் மூலப்பொருளான எத்தனால் எரிபொருளை, சுமார் 40 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பாரம் ஏற்றியவாறு, கோவை மாவட்டம், இருகூர் பகுதிக்கு வந்து கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராதவிதமாக லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியில் உள்ள எத்தனால் எளிதில் தீப்பிடிக்கும் என்பதால் சங்ககிரி, வெப்படை, தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீ பிடிக்காமல் இருக்க தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். விபத்து குறித்து வெப்படை போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

இந்த பகுதியில் யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது என தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது. கிரேன் வைத்து தூக்க முயற்சிக்கும் போது, இரும்பு உராய்வின் போது சிறு தீப்பொறி ஏற்பட்டாலும், சுமார் மூன்று கிலோ மீட்டர் பாதிப்பு இருக்கும் என வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

வெளிச்சம் குறைவானதால் நாளை காலை மீட்பு பணிகள் துவங்கும் என அதிகாரிகள் கூறினார்கள். அவ்வழியே வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வந்தது. நேற்று கோவையில் இருந்து வரவழைக்கப்பட்ட பெரிய கிரேன் மூலம் லாரி அப்புறப்படுத்தப்பட்டது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!