குமாரபாளையம் சுயேச்சை வேட்பாளருக்கு வைரம் சின்னம் ஒதுக்கீடு

குமாரபாளையம் சுயேச்சை வேட்பாளருக்கு  வைரம் சின்னம் ஒதுக்கீடு
X
குமாரபாளையம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் ஓம் சரவணாவுக்கு வைரம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தொகுதியில் ஜே.கே.கே.என் கல்வி குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா சுயேச்சையாக போட்டியிடுகிறார்.




ஓம் சரவணா முன்னதாக பா.ஜ .க நாமக்கல் மாவட்ட செயலாளராக இருந்தவர். குமாரபாளையம் தொகுதியில் பல்வேறு நலப்பணிகளை செய்திருப்பவர். மக்கள் மத்தியில் நல்ல அறிமுகமும் உள்ளவர். அதனால், குமாரபாளையம் தொகுதியில் பா.ஜ .க சார்பில் போட்டியிடுவதற்காக தொகுதியை பா.ஜ .கவுக்கு ஒதுக்கும்படி பா.ஜ நிர்வாகிகளிடம் கேட்டிருந்தார்.

ஆனால், குமாரபாளையம் தொகுதி கூட்டணி கட்சியான அ.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டது. இதில் அதிருப்தி அடைந்த ஓம் சரவணா பா.ஜ.க நாமக்கல் மாவட்ட செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், அவரது ஆதரவாளர்களின் ஆலோசனைப்படி சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்தார்.

அதற்கான வேட்மனு தாக்கல் முடிந்து இன்று சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் குமாரபாளையம் தொகுதி சுயேச்சை வேட்பாளர் ஓம் சரவணாவுக்கு வைரம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. வைரம் போல நல்ல குணத்தில் மின்னும் அவர் வைரம் போன்ற மன உறுதியும், தன்னம்பிக்கையும் மிக்கவர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்