'தொகுதியை "வைரம்" போல ஜொலிக்க வைப்பேன்: 'சுயேச்சை வேட்பாளர் ஓம்சரவணா உறுதி

குமாரபாளையம் தொகுதியை அனைத்து துறைகளிலும் வைரம் போல ஜொலிக்க வைப்பேன் என்று சுயேச்சை வேட்பாளர் உறுதி அளித்தார்.

குமாரபாளையம் சட்டசபை தொகுதியில் வைரம் சின்னத்தில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ஓம்சரவணா நகரப்பகுதியில் வீதி,வீதியாகவும், கிராமப்புறங்களில் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

நேற்று குமாரபாளையம் நகராட்சிப் பகுதியிலுள்ள தம்மன்னன் வீதி, அண்ணாநகர், பாலக்கரை, ராஜவீதி, காளிதாசர் சந்து மற்றும் மணிமேகலை தெரு ஆகிய பகுதியில் வசிக்கும் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்பகுதி பெண்கள் வாஞ்சையோடு அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

அப்போது அவர் கூறியதாவது, குமாரபாளையம் தொகுதியில், அனைவரும் அரசு வேலையில் சேரவேண்டும் என்ற எண்ணத்தில் ஜே.கே.கே.நடராஜா குழுமதித்தின் சார்பில் இலவச TNPSC பயிற்சி மையம் கடந்த 2018-ம் ஆண்டு துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த இலவசபயிற்சி மையத்தில் பயின்ற பலர் அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். இந்த டி.என்.பி.எஸ்.சி பயிற்சி வகுப்புகள் முற்றிலும் இலவசமாக நடத்தி வருகின்றோம்.

மக்களுக்குப் பல ஆயிரம் முறை இலவச பல் மருத்துவ முகாம்கள், கண் மருத்துவ முகாம்கள் மற்றும் பொது மருத்துவ முகாம்கள் நடத்தி நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சைகள், மருத்துவச்செலவுகள் அனைத்தும் இலவசமாக வழங்கி வருகிறோம். நோயாளிகளுக்கு மலிவு விலை மருந்துகடை, குமாரபாளையம் நகரில் கடந்த 3 ஆண்டுகளாக லாப நோக்கமற்று நடத்திவருகின்றோம்.

குமாரபாளையம் தொகுதி நல்ல வளர்ச்சியினை அடைய பொதுமக்கள் எனக்கு வைரம் சின்னத்தில் வாக்களித்து, மாபெரும் வெற்றிபெறச் செய்யவேண்டும். இந்த தொகுதியை எல்லா துறைகளிலும் வைரம் போல ஜொலிக்க வைப்பேன். தொகுதியில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றுவேன் என உறுதியளித்தார்.

பொதுமக்கள், மறைந்த கொடைவள்ளல் ஜே.கே.கே.நடராஜா ஐயா அவர்களின் வாரிசாக வந்துள்ளீர்கள். அது மட்டுமல்லாது நம்ம குமாரபாளையம் என்ற சேவை அமைப்பை தொடங்கி, கடந்த 4 ஆண்டுகளாக குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையத்தின் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு அரசின் திட்டங்கள் கிடைக்க பாடுபட்டு வருகிறீர்கள். எனவே, எங்கள் ஓட்டு உங்களுக்குத்தான் என்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்