வாராயோ தோழா வாராயோ.. வளமான வாழ்வு தாராயோ..சுயேச்சை வேட்பாளருக்கு வரவேற்பு
குமாரபாளையம் சட்டசபை தொகுதியில் வைரம் சின்னத்தில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ஓம்சரவணா, கிராமம், கிராமமாக சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
நேற்று குமாரபாளையம் நகராட்சிப்பகுதியிலுள்ள ஹை ஸ்கூல் ரோடு, பாரதி நகர், சத்தியபுரி மற்றும் திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதியில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்பகுதி பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.வாராயோ தோழா வாராயோ.. வளமான வாழ்வு தாராயோ..
சுயேச்சை வேட்பாளருக்கு வாழ்த்து
அந்த வரவேற்பு, ' வாராயோ தோழா வாராயோ..எங்களுக்கு வளமான வாழ்வை தாராயோ' என்று கூறுவது போல இருந்தது. மகிழ்ச்சியோடு வரவேற்பை ஏற்றுக்கொண்டு அவர் கூறியதாவது, ' குமாரபாளையம் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுப்பேன்.
அனைத்து பொது மற்றும் சமூக கழிப்பறைகள் தூய்மைப்படுத்தப்பட்டு, தொடர்ந்து பராமரிக்கப்படுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படும். குமாரபாளையத்தில் தற்போது உள்ள கழிவு மேலாண்மை வசதியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
தொகுதியிலிருந்து சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் மூலம் மின்சாரம், இயற்கை உரம் ஆகியவை தயாரிக்கப்படும். செப்டிக் டேங்குகளை சுத்தம் செய்வதற்கு தனி அலுவலகம் செயல்படுத்தப்படும். நீர் மாசுபாட்டைக் குறைப்பதற்கும், கழிவு நீரைத் தூய்மைப்படுத்தவும், பொது கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்.தொகுதியில் நான் தரும் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன் என்று உறுதியளித்தார்.
எங்கள் பகுதிக்கு நீங்கள் என்ன செய்து வருகிறீர்கள் என்பது நன்றாகவே தெரியும். கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக சேவைகள் ஏராளமாக செய்துள்ளீர்கள். பணம் சம்பாதிக்கும் நோக்கம் உங்களுக்கு இருக்காது. அதனால் எங்கள் வாக்கு உங்களுக்கே.என்று கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu