'தொகுதியில் அனைவருக்கும் வீடு' சுயேச்சை வேட்பாளர் ஓம் சரவணா உறுதி

தொகுதியில்  அனைவருக்கும் வீடு   சுயேச்சை வேட்பாளர் ஓம் சரவணா உறுதி
X
வீடு இல்லாத அனைவருக்கும் 'அனைவருக்கும் வீடு' திட்டத்தில் வீடு கட்டித்தர சுயேச்சை வேட்பாளர் ஓம் சரவணா உறுதி அளித்தார்.

குமாரபாளையம் சட்டசபை தொகுதியில் வைரம் சின்னத்தில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ஓம்சரவணா கிராமம், கிராமமாக சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.


நேற்று பள்ளிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியிலும், காவேரி ஆர்.எஸ் பகுதியிலும் உள்ள பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்பகுதி பெண்கள் அவரை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது அவர் கூறியவதாவது,

'தொகுதியில் "அனைவருக்கும் வீடு" திட்டத்தின் கீழ் வீடு இல்லாத அனைவருக்கும் வீடு கட்டித்தருவேன். தகுதியானவர்களுக்கு முத்ரா திட்டம், NEEDS திட்டம் ஆகியவற்றின் மூலம் வங்கிக்கடன் ஏற்பாடு செய்துதருவேன். தொகுதியில் கொடுத்த அனைத்து உறுதிமொழிகளையும் நிச்சயமாக நிறைவேற்றுவேன்.' என்று மக்கள் மத்தியில் உறுதியளித்தார்.

பொதுமக்கள் அவரிடம் கூறும்போது, 'மறைந்த கொடைவள்ளல் ஜே.கே.கே.நடராஜா ஐயா தொழில்துறையிலும், கல்வித்துறையிலும் ஏராளமான சேவைகளை செய்தவர். அவரது வழியில் வந்த வாரிசு நீங்கள். நம்ம குமாரபாளையம் என்ற சேவை அமைப்பை தொடங்கி கடந்த 4 ஆண்டுகளாக குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதி சுற்றுவட்டார மக்களுக்கு அரசின் திட்டங்கள் கிடைக்க பாடுபட்டு வருகிறீர்கள். எனவே, எங்கள் ஓட்டு உங்களுக்கே என்று உறுதிபட தெரிவித்தனர்.

Tags

Next Story
ai solutions for small business