/* */

குமாரபாளையம், பள்ளிபாளையத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்..

குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

குமாரபாளையம், பள்ளிபாளையத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்..
X

பெற்றோர்களை இழந்த பெண் குழந்தைகள் 200 பேருக்கு தலா 5 ஆயிரம் அஞ்சலக சேமிப்பு அலுவலகத்தில் செலுத்தப்பட்டது.

திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா திமுக சார்பில் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா திமுக நகர செயலாளர் செல்வம் தலைமையில் கொண்டாடப்பட்டது. குமாரபாளையம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் கட்சியின் கொடி ஏற்றிவைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள், அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் அம்மா உணவகத்தில் 5 நாட்களுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது.

குப்பாண்டபாளையம் திமுக சார்பில் இலவச மருத்துவ முகாம் ஊராட்சி தலைவர் கவிதா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மதுரா செந்தில், ஒன்றிய செயலாளர் வெப்படை செல்வராஜ், நிர்வாகி வேலுமணி உள்பட பலர் பங்கேற்றனர். மேலும், உதயநிதி நற்பணி மன்றம் சார்பில் தலைவர் அசோக்குமார் தலைமையில் எதிர்மேடு அன்னை ஆதரவற்றோர் மையத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.

பள்ளிபாளையத்தில் உதயநிதி பிறந்தநாள்:

இதேபோல, பள்ளிபாளையத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா நகராட்சி தலைவர் செல்வராஜ் தலைமையில் கொண்டாடப்பட்டது. அனைத்து வார்டுகளிலும் கட்சியின் கொடி ஏற்றிவைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள், அன்னதானம் வழங்கப்பட்டது. மரக்கன்றுகள் நடப்பட்டன.

மேலும், திமுக ஒன்றிய செயலாளர் வெப்படை செல்வராஜ் தலைமையில் பெற்றோர்களை இழந்து வாடும் பெண் குழந்தைகள் 200 பேருக்கு தலா 5 ஆயிரம் வீதம் அஞ்சலக சேமிப்பு அலுவலகத்தில் கிசான் விகாஸ் பத்திர திட்டத்தில் செலுத்தப்பட்டது.

Updated On: 27 Nov 2022 1:30 PM GMT

Related News