காவிரி நீர் பெற்று தராத ஒன்றிய அரசுக்கு எதிராக தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்!

காவிரி நீர் பெற்று தராத ஒன்றிய அரசுக்கு எதிராக தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்!
X

படவிளக்கம்: பள்ளிபாளையத்தில் காவிரி நீர் உரிமையை பெற்றுத்தராத ஒன்றிய அரசை கண்டித்து தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

பள்ளிபாளையத்தில் காவிரி நீர் உரிமையை பெற்றுத்தராத ஒன்றிய அரசை கண்டித்து தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

காவிரி நீர் பெற்று தராத ஒன்றிய அரசுக்கு எதிராக தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்

பள்ளிபாளையத்தில் காவிரி நீர் உரிமையை பெற்றுத்தராத ஒன்றிய அரசை கண்டித்து தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பேருந்து நிலையம் அருகே, காவேரி நதிநீர் உரிமையை தமிழ்நாட்டிற்கு பெற்று தராத ஒன்றிய அரசை கண்டித்து, சமூக நீதிக் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டமானது காலை துவங்கி மாலை வரை நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு இடதுசாரி சிந்தனையாளர் நடுவோம் ராஜாராம், மதிமுக நகரச் செயலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் தலைமை வகித்தனர். இதில் மறுமலர்ச்சி திமுக, புரட்சிகர இளைஞர் முன்னணி ,லோக் ஜனசக்தி கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஆதித்தமிழர் பேரவை ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,(எம்.எல்),இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இடதுசாரிகள் சிந்தனையாளர் நடுவோம், தமிழ் புலிகள் கட்சி, ஆல் இந்தியன் கிசான் சங்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். தற்சார்பு விவசாயிகள் சங்க தலைவர் பொன்னையன் சிறப்புரையாற்றினார் .

ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேச மூர்த்தி கோரிக்கை குறித்து பேசினார். இதில் ஒன்றிய அரசு தமிழக காவிரி உரிமையை பெற்றுக் கொடுக்க வேண்டும்,ஆண்டுக்கு 25 டிஎம்சி தண்ணீரை பெற்றுக் கொடுக்க வேண்டும், ஒன்றிய அரசு தமிழக மக்களை வஞ்சிக்கும் போக்கை கைவிட வேண்டும், காவிரி நதி நீர் உரிமையை தமிழ்நாட்டிற்கு பெற்றுத் தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய கோஷங்களை சமூக நீதிக் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பினர். ஏராளமானோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!