சி.ஐ.டி.யூ சார்பில் 20 சதம் போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம்

சி.ஐ.டி.யூ சார்பில் 20 சதம் போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம்
X

படவிளக்கம்: குமாரபாளையத்தில் சி.ஐ.டி.யூ சார்பில் 20 சதம் போனஸ் கேட்டு தாலுக்கா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

குமாரபாளையத்தில் சி.ஐ.டி.யூ சார்பில் 20 சதம் போனஸ் கேட்டு தாலுக்கா அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடந்தது.

சி.ஐ.டி.யூ சார்பில் 20 சதம் போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம்

குமாரபாளையத்தில் சி.ஐ.டி.யூ சார்பில் 20 சதம் போனஸ் கேட்டு தாலுக்கா அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடந்தது.

விலைவாசி உயர்வு, வேலையின்மை உள்ளிட்ட காரணங்களால் விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. அரசு ஊழியர்களுக்கு குறைந்த பட்சம் போனஸ் வழங்க அரசு சார்பில் அரசானை இட்டு உத்திரவாதம் செய்கிறது. ஆனால் விசைத்தறி தொழிலாளர்களுக்கு இதுவரை போனஸ் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட சிறப்பு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 20 சதவீதம் போனஸ் கேட்பது என முடிவு செய்து, இரு நாட்கள் முன்பு தெருமுனை பிரச்சாரம் நகரம் முழுதும் நடத்தப்பட்டது. நேற்று இதே கோரிக்கையை வலியுறுத்தி தாலுக்கா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும் கோரிக்கை மனு தாசில்தார் சண்முகவேல் வசம் கொடுக்கப்பட்டது. இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்த நேரம் ஒதுக்கி தரவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.இதில் நகர தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் அசோகன், மாவட்டதலைவர் மோகன், நகர செயலர் பாலுசாமி, நகர பொருளர் வெங்கடேஷ் உள்பட பலர் பங்கேற்றனர். கடந்த ஆண்டு இதெஹ் கோரிக்கை வலியுறுத்தி பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், எதிர்பார்த்த போனஸ் கிடைக்கபெறவில்லை. நகராட்சி தலைவர் விஜய் கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினார்கள். இந்த ஆண்டாவது எதிர்பார்த்த போனஸ் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொழிலாளர்கள் உள்ளனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது