அனுமதி இன்றி இயங்கிய ஆறு சாயப்பட்டறைகள் இடிப்பு

குமாரபாளையத்தில் அனுமதி இன்றி இயங்கிய ஆறு சாயப்பட்டறைகளை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், தொழிலாளர்கள் உதவியுடன் சம்பட்டியால் அடித்து உடைத்தனர்.

அனுமதி இன்றி இயங்கிய ஆறு சாயப்பட்டறைகள் இடிப்பு

குமாரபாளையத்தில் அனுமதி இன்றி இயங்கிய ஆறு சாயப்பட்டறைகளை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், தொழிலாளர்கள் உதவியுடன் சம்பட்டியால் அடித்து உடைத்தனர்.

குமாரபாளையம் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றன இவற்றில் பெரும்பாலான சாயப்பட்டறைகள் அனுமதியின்றி இயங்குவதுடன் அதிலிருந்து வெளியேறும் சாயக் கழிவுகளை சுத்திகரிப்பு செய்யாமல், சாக்கடை கால்வாய்கள் மூலம் காவிரி ஆற்றில் நேரடியாக கலக்கின்றனர், இதனால் காவிரி ஆறு மாசு ஏற்படுகிறது, இதனை கருத்தில் கொண்டு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பல ஆண்டுகளாக சாயப்பட்டறைகளை ஆய்வு செய்து அனுமதி இன்றி இயங்கக்கூடிய சாயப்பட்டறைகளை இடித்து வருகின்றனர். பல சாயத் தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இருப்பினும் பல இடங்களில் சாயத் தொழிற்சாலை மீண்டும் அனுமதியின்றி இயங்கி வருவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் லாவண்யா மற்றும் ஈரோடு மாவட்ட பறக்கும் படை மாசு க்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் திடீரென சாய் பட்டறைகளை ஆய்வு செய்தனர். அப்பொழுது அனுமதியின்றி இயங்கிய சுந்தரம் நகர், நடராஜா நகர் ,ஓடக்காடு, மற்றும் செல்வா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வந்த ஆறு சாயப்பட்டறைகளை கட்டிட தொழிலாளர்கள் உதவியுடன் சம்மட்டியால் அடித்து உடைத்து தள்ளினர். அப்பொழுது சாயப்பட்டறை உரிமையாளர்கள் கூறியதாவது:

அனுமதி பெற்று இயங்கக்கூடிய சாயப்பட்டறைகள் இரவு நேரங்களில் தண்ணீர் சுத்தி இருக்காமல் வெளியேற்றிய வருகின்றனர், அவர்களை கண்டிக்காமல் மனித உழைப்பால் செயல்படும் சிறு சாயப்பட்டறைகளை இடித்து வருகின்றனர். இது விசைத்தறி தொழிலை மட்டுமன்றி சிறு தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக சிறு சாயப்பட்டறை உரிமையாளர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

குமாரபாளையத்தில் அனுமதி இன்றி இயங்கிய சாயப்பட்டறைகளை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், தொழிலாளர்கள் உதவியுடன் சம்பட்டியால் அடித்து உடைத்தனர்.

Tags

Next Story
ai in future education