குமாரபாளையத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் பாம்புகள், குரங்குகளை பிடிக்க கோரிக்கை

குமாரபாளையத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் பாம்புகள், குரங்குகளை பிடிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
குமாரபாளையத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் பாம்புகள், குரங்குகளை பிடிக்க கோரிக்கை
X

குமாரபாளையம் அப்பன் பங்களா பகுதியில் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகள்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அப்பன் பங்களா, உடையார்பேட்டை பகுதியில் குரங்குகள் அதிகம் சுற்றித்திரிகின்றன. இவை மின் கம்பிகளில் விளையாடி மின் கம்பிகள் அறுந்து போக காரணமாகின்றன. மேலும் குடியிருப்பு பகுதியில் மற்றும் வீடுகளில் நுழைந்து காய்கறிகள், தின்பண்டங்கள் ஆகியற்றை எடுத்து செல்கின்றன. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்து வருகின்றனர். இதனால் மின்வாரிய பணியாளர்களும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள்.

இதே போல் ராஜா வீதி, திருவள்ளுவர் வீதி பகுதியில் புதைவட மின் கம்பிகள் அமைக்கப்பட்டு, மீதமுள்ள பெரிய அளவிலான மின் கம்பி கேபிள்கள், ஆங்காங்கே குறுகிய சந்துகளில், பொதுமக்கள் நடக்க கூட முடியாத வகையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த கேபிள்களில் பாம்பு, தேள் ஆகிய விஷ ஜந்துக்கள் தங்கி வருவதுடன், அவ்வப்போது பொதுமக்களை தீண்டி வருவதால், பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். எனவே குரங்குகள் விரட்டவும், புதைவாடா மீதமுள கேபிள்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பில் நகர நிர்வாகி சித்ரா தலைமையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் மின்சார வாரியத்திற்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது.

குமாரபாளையம் பாலக்கரை பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான ஆணையாளர் குடியிருப்பு உள்ளது. இதன் பின்புறம் காலி இடமாக உள்ளது. இதில் செடி, கொடிகள் புதர் போல் வளர்ந்துள்ளது. இதன் அருகில் உள்ள வீடுகளில், இந்த செடி, கொடிகள் படர்ந்துள்ளது. இதன் மூலம் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் குடியிருப்பு பகுதியில் நுழைந்து, பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக புகார் எழுத்துள்ளது.

இது குறித்து நகராட்சி ஆணையாளர் ராஜேந்திரன் வசம் மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பில் நிர்வாகிகள் சித்ரா, விமலா உள்ளிட்ட பலர் மனு கொடுத்து, பொதுமக்களை அச்சுறுத்தி வரும் செடி, கொடிகளை அகற்றியும், அங்குள்ள வடிகாலையும் தூய்மை செய்து தருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

குமாரபாளையம் கிழக்கு காவேரி நகர் பகுதியில் மூன்று மின் கம்பங்களில் தெரு விளக்குகள் இல்லாமல் இருந்தது. இதனால் காவிரி கரையோர பகுதி என்பதால் அடிக்கடி பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துகள் வரத் தொடங்கின. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். பொதுமக்கள் அச்சம் நீங்க, மூன்று மின் கம்பங்களில் புதிய மின் விளக்குகள் அமைக்க மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட செயலர் காமராஜ், மகளிரணி நிர்வாகிகள் சித்ரா, விமலா ஆகியோர் நகராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தனர். இந்த மனுவை பரிசீலித்த நகராட்சி நிர்வாகத்தினர் மூன்று மின் கம்பங்களில் புதிய மின் விளக்குகள் அமைத்தனர். இதனால் மக்கள் நீதி மய்யம் சார்பில் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் உள்ளிட்ட நகராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Updated On: 30 March 2023 3:46 AM GMT

Related News