/* */

குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி : தற்காலிக நிறுத்தம்

குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தபட்டுள்ளதாக தலைமை டாக்டர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில்   கொரோனா தடுப்பூசி : தற்காலிக நிறுத்தம்
X

கொரோனா தடுப்பூசி போடுதல் (மாதிரி படம்)

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் தெரிவித்துள்ளார்.

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி, சுகாதாரத்துறையினர், போலீஸ் துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் உள்ளிட்ட அரசுத்துறை பணியாளர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு செலுத்தப்பட்டு வந்தது. தற்போது தடுப்பூசி மருந்து இருப்பு இல்லாததால் தடுப்பூசி செலுத்துவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, குமாரபாளையம் அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் பாரதி,

'குமாரபாளையம் ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி 45 முதல் 59 வயது வரையிலானவர்களுக்கு செலுத்தப்பட்டு வந்தது. அதில் முதல் ஊசி 696 பேருக்கும், 2வது ஊசி ஒன்பது பேருக்கும் போடப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் ஊசி ஆயிரத்து 99 பேருக்கும், இரண்டாவது ஊசி 35 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. தற்போது தடுப்பூசி மருந்து ஸ்டாக் இல்லை. அதனால், தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மருந்து வந்ததும் மீண்டும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

வட்டார மருத்துவ அலுவலர் ரேவதி கூறியதாவது: வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் போடப்பட்டு வந்த கொரோனா தடுப்பூசி போடும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். மருந்து ஸ்டாக் இல்லை. மருந்து வந்ததும் மீண்டும் தடுப்பூசி போடப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Updated On: 21 April 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!