பள்ளிபாளையம் பகுதியில் கொரோனா விழிப்புணர்வின்றி நடமாடும் மக்கள்

பள்ளிபாளையம் பகுதியில் கொரோனா விழிப்புணர்வின்றி நடமாடும் மக்கள்
X

கொரோனாவை தவிர்க்க மாஸ்க் அணிவது கட்டாயம்.

பள்ளிபாளையம் பகுதிகளில் கொரோனா அச்சம் இல்லாமல் நடமாடும் மக்களால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா பரவல் இரண்டாம் அலையாக வேகமாக பரவி வருகிறது. பொது இடங்களில் அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை மக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும். மாஸ்க் போடுவது, கூட்டம் சேராமல் இருப்பது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது என நம்மை நாமே காத்துக்கொள்ளவேண்டும்.

பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் யாரும் பெரும்பாலும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. பொதுமக்கள் மிகவும் அலட்சியமாக உள்ளனர். கடைகளுக்கு வரும்போதும், மார்க்கெட்டுகளுக்கு வரும்போதும் மாஸ்க் அணிவதில்லை.

பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே செல்லக்கூடாது. போனாலும் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.

ஆனால், அந்த விதிமுறைகளை யாரும் பின்பற்றுவது இல்லை. வழக்கமான நாட்களைப் போல அலட்சியமாக இருக்கின்றனர். டீக்கடை, பேக்கரி, ஓட்டல்களிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. அதிகாரிகள் இதுபோன்று அலட்சியமாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா தொற்றிலிருந்து நாம் நம்மை காப்பாற்றிக்கொள்ள இன்னும் நமக்கு விழிப்புணர்வு அவசியம்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்