நியாயவிலைக் கடை அமைக்க கவுன்சிலர் நிதியுதவி!

நியாயவிலைக் கடை அமைக்க கவுன்சிலர் நிதியுதவி!
X

படவிளக்கம் : குமாரபாளையத்தில் நியாய விலைக்கடை அமைக்க நமக்கு நாமே திட்டத்தில் நகர மன்ற உறுப்பினர் விஜயா கந்தசாமி, நகராட்சி தலைவர் விஜய் கண்ணனிடம், காசோலையை வழங்கினார்.

குமாரபாளையத்தில் நியாய விலைக்கடை அமைக்க நமக்கு நாமே திட்டத்தில் நகர மன்ற உறுப்பினர் நிதி உதவி செய்தார்.

நியாயவிலைக் கடை அமைக்க கவுன்சிலர் நிதியுதவி

குமாரபாளையத்தில் நியாய விலைக்கடை அமைக்க நமக்கு நாமே திட்டத்தில் நகர மன்ற உறுப்பினர் நிதி உதவி செய்தார்.

குமாரபாளையம் நகராட்சி வார்டு எண் 9 திருவள்ளுவர் நகர் பகுதியில் நியாய விலை கடை அமைத்து தருவோம் என்று அப்பகுதி கவுன்சிலர் விஜயா, தேர்தல் சமயத்தில் வாக்குறுதி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் நமக்கு நாமே திட்டத்தில் புதிய நியாய விலை கடை அமைக்க ரூபாய் 19 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் எனும் மொத்த மதிப்பீட்டில், பொதுமக்கள் பங்களிப்பான ரூபாய் 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்க வழங்க முன்வந்தார். அதன்படி, அதற்கான காசோலையை 9 வார்டு கவுன்சிலர் விஜயா கந்தசாமி, நகராட்சி தலைவர் விஜய்கண்ணனிடம் வழங்கினார். இதில் நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், நிர்வாகிகள் ஐயப்பன், செந்தில், கந்தசாமி, வினோத்குமார், ஹரிபாலாஜி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

குமாரபாளையத்தில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது.

குமாரபாளையத்தில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நகராட்சி ஆணையர் சரவணன் தலைமையில் நடந்தது. நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் பங்கேற்று, முகாமை துவக்கி வைத்தார். இதில் நிரந்தர பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் 288 நபர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. இதில் ரத்த கொதிப்பு, ரத்த வகை கண்டறிதல், ஈ.சி.ஜி, சர்க்கரை அளவு பார்த்தல், கண் பார்வை பரிசோதனை, உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டன. பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் சந்தானகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings