குமாரபாளையம் தாலுகா அலுவலத்தில் வருவாய்த்துறை ஆணையர் திடீர் ஆய்வு

குமாரபாளையம் தாலுக்கா அலுவலத்தில் தமிழக கூடுதல் தலைமை செயலரும், தமிழக வருவாய்த்துறை ஆணையருமான பிரபாகரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக கூடுதல் தலைமை செயலரும், தமிழக வருவாய்த்துறை ஆணையருமான பிரபாகரன், குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இது குறித்து தாசில்தார் சண்முகவேல் கூறுகையில், தாலுக்கா அலுவலகத்தில் உள்ள ஈ சேவை மையத்தினை ஆய்வு செய்து, வருமான சான்று, இருப்பிடச் சான்று, பட்டா மாறுதல் உள்ளிட்ட பணிகள் குறித்தும், வட்ட வழங்கல் அலுவலர் அலுவலகத்தில் புதிய ரேசன் கார்டு விண்ணப்பம் எவ்வளவு உள்ளது? எத்தனை நாட்களில் விநியோகம் செய்யப்படுகிறது? பெயர்கள் நீக்கல், சேர்த்தல் பணிகள் சரியாக நடைபெறுகிறதா? என்பது குறித்தும், ஓ.ஏ.பி. ஆணைகள் உரிய காலத்தில் வழங்கிட வேண்டும் எனவும், இதுவரை எவ்வளவு வழங்கப்பட்டுள்ளது? விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பித்த எத்தனை நாட்களில் ஆணைகள் வழங்கப்படுகிறது? என்பது குறித்தும், நில அளவை பிரிவில் உட்பிரிவு பட்டா உள்ளிட்ட சான்றுகள் வழங்கப்படுவது குறித்தும் கேட்டறிந்தார். மேலும் விண்ணப்பதாரர்களுக்கு போன் செய்து, சான்று கேட்டு எப்போது விண்ணப்பம் செய்தீர்கள்? எப்போது சான்று பெற்றீர்கள்? என கேட்டறிந்தார்.
மேலும் குமாரபாளையம் தாலுக்கா அளவிலான விவசாய கூலி தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் முகாம் நடைபெற்றது.
முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விவசாய கூலி தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பெற தகுதியுள்ள மாணவ, மாணவியர் முகாம் நடைபெறும் நாளில் அதிகபட்ச மனுக்கள் பதிவு செய்ய ஏதுவாக நேரில் வந்து பதிவு செய்திட கேட்டுக்கொள்ளப்பட்டனர். நன்செய் நிலம் வைத்துள்ளவர்கள் 2.5 ஏக்கரும், புன்செய் நிலம் 5 ஏக்கரும் வைத்துள்ளவர்கள் தகுதியானவர்கள் ஆவார்கள்.
பெற்றோர் ஆதார், மாணவ, மாணவியர் ஆதார், ரேசன் அட்டை, வங்கி பாஸ் புக், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, கல்வி நிறுவனங்களில் கல்வி பயின்று வருவதற்கான சான்று உள்ளிட்ட ஆவணங்கள் முகாமிற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தியிருந்தனர். குமாரபாளையம் கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் விவசாய தொழிலாளர் குடும்பத்தினர் ஆர்வத்துடன் பங்கேற்று விண்ணப்பித்தனர். தனி வட்டாச்சியர் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் பலரும் பங்கேற்று விண்ணப்பங்களை பெற்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu