கல்லூரி பேருந்து ஓட்டுனர் போதையில் ஓட்டியதால் விபத்து

கல்லூரி பேருந்து ஓட்டுனர் போதையில் ஓட்டியதால் விபத்து
X

படவிளக்கம் : பள்ளிபாளையம் அருகே மது போதையில் ஓட்டுனர் பேருத்தை இயக்கியதால், பேருந்து சேதமானது.

பள்ளிபாளையம் பகுதியில் தனியார் கல்லூரி பேருந்தை போதையில் இயக்கிய ஓட்டுனர், பேருந்தில் மாணவர்கள் மாணவிகள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

கல்லூரி பேருந்து ஓட்டுனர் போதையில் ஓட்டியதால் விபத்து

பள்ளிபாளையம் பகுதியில் தனியார் கல்லூரி பேருந்தை போதையில் இயக்கிய ஓட்டுனர், பேருந்தில் மாணவர்கள் மாணவிகள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

திருச்செங்கோடு அருகே செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியின் பேருந்தினை, அதன் ஓட்டுனர் வெங்கடாஜலம் என்பவர், ஈரோடு மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் உள்ள மாணவ மாணவிகளை அழைத்துச் செல்வதற்காக வாகனத்தை ஓட்டி வந்தார்.

மாணவ மாணவிகளை அழைத்து வராமல் அளவுக்கு மீறி மது அருந்தியதால், மது மயக்கத்தால் வாகனத்தை இயக்கியதில், சாலைகளில் உள்ள தடுப்பு சுவர்களின் மோதி வாகனம் சேதமடைந்தது. அவர் மேலும் பள்ளிபாளையம் பகுதியில் தற்போது மேம்பாலம் கட்டும் பணிக்காக, சாலைகளில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது.

இது தெரியாமல், மது மயக்கத்தில் ஒருவழிப் பாதையில் இயக்கியதால், பெட்ரோல் நிலையத்தில் உள்ள பக்கவாட்டுச் சுவர்களின் மோதி பேருந்து சேதமானது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கு இருந்த பொதுமக்கள் உடனடியாக பேருந்தினுள் ஏறி வாகனத்தை நிறுத்தினர். இதனால் அவர்களிடம் மது மயக்கத்தில் இருந்த ஓட்டுனர் வெங்கடாஜலம் தகராறில் ஈடுபட்டார்.

மேலும் பொதுமக்கள் அவரை விசாரணை மேற் கொள்கையில் பார்த்துக்கொள்ளலாம் பார்த்துக்கொள்ளலாம் என்று உளறிக் கொண்டே வாகனத்தை விட்டு இருந்து கீழே இறங்கியவர் சாலை நடுவே அமர்ந்து கொண்டார். அவருக்கு பாதுகாப்பு இல்லை என கருதிய பொதுமக்கள் அவரை பேருந்தின் இருக்கையில படுக்க வைத்தனர் ஓட்டுனரின் மது மயக்கத்தால் வாகனம் சாலையின் நடுவே விபத்து ஏற்படுத்தும் வகையில் ஒட்டியது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இது குறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story