கலெக்டர் உத்திரவை மீறி கெமிக்கல் ஆலை பணிகள்: ஊராட்சி நிர்வாகம் எதிர்ப்பு

கலெக்டர் உத்திரவை மீறி கெமிக்கல் ஆலை பணிகள்:  ஊராட்சி நிர்வாகம் எதிர்ப்பு
X

குமாரபாளையம் அருகே கலெக்டர் உத்திரவை மீறி கெமிக்கல் ஆலை பணிகள் நடைபெறுவதையொட்டி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் போர்டு வைக்கப்பட்டுள்ளது.

குமாரபாளையம் அருகே கலெக்டர் உத்திரவை மீறி கெமிக்கல் ஆலை பணிகள் நடைபெறுவதையொட்டி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் போர்டு வைக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே கலெக்டர் உத்திரவை மீறி கெமிக்கல் ஆலை பணிகள் நடைபெறுவதையொட்டி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் போர்டு வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தட்டான்குட்டை ஊராட்சி தலைவி புஷ்பா கூறியதாவது:

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி வீ.மேட்டூர் பகுதியில் தனியார் கெமிக்கல் ஆலை நிறுவ ஏற்பாடுகள் செய்து வந்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது குறித்த தகவலறிந்த மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, அந்த ஆலை நிர்வாகத்தினரிடம் பணிகள் நிறுத்துமாறு சொல்லி சென்றனர். ஆனால் அதனை பொருட்படுத்தாமல் மீண்டும் ஆலை நிறுவும் பணிகள் இரவு பகலாக நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தட்டான்குட்டை ஊராட்சி நிர்வாகம் சார்பில் போர்டு வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
ai in future agriculture