ரூ.75 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு பூமி பூஜை: முன்னாள் அமைச்சர் பங்கேற்பு

குமாரபாளையத்தில் 75 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு நடைபெற்ற பூமி பூஜை முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்றார்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சியில் 16,17,29,22,13,7,23,30 உள்ளிட்ட வார்டுகளில் 75 லட்சம் மதிப்பிலான aவடிகால் மற்றும் இதர பணிகள் செயல்படுத்திட எம்.எல்.ஏ. நிதியின் கீழ் பூமி பூஜை நடைபெற்றது. நகர அ.தி.மு.க. செயலர் பாலசுப்ரமணி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான தங்கமணி பூஜையில் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார். கவுன்சிலர்கள் பழனிசாமி, புருஷோத்தமன், நிர்வாகிகள் திருநாவுக்கரசு, அர்ச்சுணன், ரவி, பாஸ்கரன் உள்பட பலர் உடனிருந்தனர்.
எம்.எல்.ஏ. நிதி ஒதுக்கீடு குறித்து மூத்த அரசியல்வாதிகள் கூறியதாவது:
எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதிக்காக ரூ.352 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே 50 சதவீதம் விடுவித்திருந்த நிலையில் மீதமுள்ள 50 சதவீதமும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுக்கு ஒவ்வொரு வருடமும் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.
இந்த தொகையில் எம்.எல்.ஏக்கள் தங்களுடைய தொகுதியில் கட்டமைப்பு வசதிகளை செயல்படுத்துவார்கள். இந்த நிலையில் 2021-2022 ஆம் நிதியாண்டுக்கான சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி இதுவரை ஒதுக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த தொகையை ஒதுக்கீடு செய்யுமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தது. இதுக்குறித்து பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதத்திற்குள் விடுவிக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியினை, ஒதுக்க வேண்டும்.
, இனியும் தாமதம் செய்யாமல் 2021-2022 ஆம் ஆண்டுக்குரிய சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியினை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தினார். இதை அடுத்து எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதிக்காக 352 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2021-2022 ஆண்டுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் 50 சதவீதத்தை தமிழக அரசு விடுவித்தது. இந்த நிலையில் ஏற்கனவே மீதமுள்ள 50 சதவீத தொகையும் தமிழக அரசு விடுவித்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu